பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம் 3, 45

அவர்கள் குழுவில் என் தந்தையாரும் நடிகரா யிருந்தமையால் இச்செய்திகளை அவர்மூலம் நான் அறிய முடிந்தது.

கோவலன்நாடகத்தை முதன்முறை மதுரையில் அரங்கேற்றியபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் சுவாமி களின் புலமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

'கோவலன்' நாடகக் கதை எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் விளக்கமாகக் குறிப்பிட்ட வேண்டியதில்லை. கண்ணகி கொடுத்த காற்சிலம்பை விற்றுவர மதுரைநகருக்குப் போவதாகக்கூறுகிறான் கோவலன். அப்போதுகண்ணகியின்வாய்மொழியாக,

"மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு

மன்னா போகாதீர் இன்று” என்ற பாடல் பாடப்படுகின்றது. மதுரை நகரில் அவர்கள் முன்னிலையிலேயே மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்குப் போகவேண்டாம் என்று பாடினால் அவர்கள் மனம் எப்படியிருக்கும்?.... இந்தப் பாடலைப் பாடத் தொடங்கியதும் சபையோர் கூச்சலிட்டு 'எங்கே சங்கரதாஸ்? கொண்டு வா மேடைக்கு' என்று ஆரவாரம் செய்தார்கள்.

சுவாமிகள் மேடைக்கு வந்து கெம்பீரமாக நின்றார். சபையிலிருந்து கேள்விகள் சரமாரியாகக் கிளம்பின. "மாபாவியோர் கூடி வாழும் மதுரை"