பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னுரை

நாடகத் தமிழைப்பற்றி நாள்தோறும் பேசுகிறோம் அதைப் பேணி வளர்த்த பெரியாரைப்பற்றி நாடு இன்னும் பேசவில்லை.

1922-ஆம் ஆண்டுவரை நம்மிடையே வாழ்ந்து மறைந்த தமிழ் நாடகத் தலைமையாசிரியர் ஒருவருடைய பெயர் தமிழ் மக்கள் மனத்திலே நின்று நிலவும் அளவுக்கு நன்கு விளம்பரப்படுத்தப்படவில்லை

நாடக உலகம் மட்டுமன்று, தமிழ் இலக்கிய உலகமே தன் இதயத்தில் வைத்துப் போற்ற வேண்டிய பெரும் புலவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

ஆனால், தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கு எங்கள் சுவாமிகளைப்பற்றி எதுவும் தெரியாது பெயரைத் தெரிந்த ஒரு சிலருக்கும் அவருடைய பெருமை தெரியாது இது காலம் செய்த சதி.

சுவாமிகளின் ஆயிரக்கணக்கான மாணாக்கர் கூட்டத்தில் அடியேனும் ஒருவன், அவர் வாழ்ந்த காலத்தில் நான் அறியாச் சிறுவன நனகு அறிமுகப்படுத்தும் அளவுக்கு உறவாடிப் பழகியவனல்லன்