பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

ஒரு முறை சுவாமிகள் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் நடித்தபோது, சத்தியவானுடைய உயிரைக் கவர்ந்து வர முடியாமல் திரும்பிய கிங்கரர் களைக் கோபித்துக்கொள்ளும் கட்டத்தில் ஆவேசத் துடன் கூச்சலிட்டுக் கையிலிருந்த சூலாயுதத்தை ஓங்கித் தரையில் அடித்தவுடன் உண்மையாகவே சபையிலிருந்த ஒர் அம்மையாருக்குக் 'கருச்சிதைவு' ஏற்பட்டுவிட்டதாம். அன்றுமுதல் மேற்சொன்ன காட்சி நடைபெறுமுன் கம்பெனியார் மேடைக்கு வந்து, "கர்ப்பிணிகள் யாராவது இருந்தால் தயவுசெய்து இந்தக் காட்சி முடியும்வரை வெளியே சென்று விடுங்கள்"எனக் கேட்டுக் கொள்வார்களாம்.

மற்றொரு சமயம் 'பிரகலாதன்' நாடகத்தில் சுவாமிகள் இரணியனாக நடித்தபோது, "நாராயணாய நம" என்று கூறிய பிரகலாதனை இரணியன் தன் தடியிலிருந்து கீழே தள்ளிக் கோபித்துக் கொள்ளும் காட்சியில், சுவாமிகள் பிரகலாதனாக நடித்த சிறுவனைத்தமது வலது கையால்துக்கிக்கீழே எறிந்து கர்ஜித்தாராம். சபையிலிருந்த ஓர் அம்மையார், "ஐயோ பாவி!பிள்ளையைக் கொன்னுட்டானே" என்று அலறி மூர்ச்சையுற்றுச்சாய்ந்துவிட்டாராம்.

"நளதமயந்தி" நாடகத்தில் சுவாமிகளின் "சனீசுவர பகவான்" வேடம் பார்க்க மிகப் பயங்கரமாக இருக் குமாம். உடம்பெல்லாம் கறுப்பைப் பூசிக்கொண்டு அதன்மேல் எண்ணையும் தடவிப் பளபளப்பான