பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வை சண்முகம்

வாழ்க்கைக் குறிப்பு

ருபதாம் நூற்றாண்டின்

இணையற்ற நாடகக் கலைஞர்கள் என்ற புகழுக்கு உரியவர்கள் டி.கே எஸ். சகோதரர்கள் 'நாடக நால்வர்' எனப்படும். இவர்களின் மூன்றாமவர் தி .க .சண்முகம் திரு. தி. க. சங்கரன், திரு. தி க .முத்துசாமி இருவரும் இவருக்கு மூத்தவர்கள். திரு. தி க .பகவதி இளையவர்.

நாஞ்சில் நாடு தந்த நாடக நால்வரின் தந்தையார் டி.எஸ். கண்ணுசாமிப் பிள்ளை; தாயார் சீதையம்மாள்; 'மனோன்மணியம்' ஆசிரியர் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன் முறை. திரு. சண்முகம் 1912 ஏப்ரல் 26ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார் .ஆறாவது வயதிலேயே தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களை ஆசிரியராகக் கொண்ட மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நடிகராகச் சேர்ந்தார். சின்னஞ்சிறு வயதிலேயே நாரதர் - அபிமன்யு - மனோகரன் முதலிய வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

1941-ல் மதுரைத் தமிழ்ச் சங்கம் இவருக்கு முத்தமிழ்க் கலாவித்துவரத்தினம்' என்ற பட்டத்தை வழங்கியது. 1944-ல் டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் இவருக்கு 'அவ்வை' என்ற பட்டம் வழங்கினார்.

'மேனகா' படம் முதல் 'கப்பலோட்டிய தமிழன்’ படம் வரை பற்பல திரைப்படங்களில் திரு சண்முகம் சிறப்பாக