பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம் 令7

1966-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மாநாட்டில் இவர் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு தமிழ் நாடக வரலாறு பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கினார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 1968-ல் திரு. சண்முகம் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

5. 10 .1971ல் பாரதக் குடியரசுத் தலைவர் இவருக்கு 'பத்மஶ்ரீ'என்ற சிறப்புப் பட்டம் வழங்கினார்.

'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்', 'நாடகக் கலை', 'நெஞ்சு மறக்குதில்லையே' ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் நிகழ்த்திய ஆராய்ச்சிச்சொற்பொழிவுத் தொகுப்புநூலாகிய 'நாடகக்கலை’ சென்னைப் பல்கலைக் கழகத்தின் பி. ஏ., பி.எஸ்ஸி. ஆகிய வகுப்புகளுக்கு 1972-ல் துணைப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ள சிறப்பு குறிப்பிட்டத்தக்கது.

திரு. சண்முகம் 26.4. 72-ல் தமது மணிவிழாவின்போது, 'எனது நாடக வாழ்க்கை' என்ற புதிய நூலின் முதல் பாகத்தை அரங்கேற்றினார்.

15. 2 .73 வியாழக்கிழமை காலையில் சென்னையில் மறைவெய்தினார். கலையுலகம் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்தது.

திரு. அவ்வை சண்முகத்தின் நாடக வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு 'பொன் ஏடு' என்று சொன்னால் அது மிகையாகாது.

©