121
களில், தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளைப் பேசினால், இந்தக் கண்ணியவான்கள் எனனென்ன கூறுகிறார்கள்—எதெதற்கு முடிச்சுப் போடுகிறார்கள்! கொஞ்சம் யோசித்துப் பார்க்கச் சொல்லேன்!!
வேலூரில் மாநாடு நடத்தலாம் என்று நண்பர் நடராசனும், போளூரில் நடத்தலாம் என்று சுப்பிரமணியமும் கூறுவதாக வைத்துக்கொள் தம்பி! இந்தப் பெரிய கட்சியில் உள்ளவர்களுக்கு எவ்வளவு ‘சின்னப் புத்தி’ வந்து விடுகிறது—நடராசன்—சுப்பிரமணியம் லடாய்! மாநாடு நடத்துவதில் தகராறு! பிளவு! பிளவு! குழப்பம்! குளறல்!! ஏ! அப்பா! கொட்டை எழுத்துக் கோமான்களும், நெட்டுருப் பேச்சாளரும், நெரித்த புருவத்தினரும் என்னென்ன பேசுவார்கள்! பேசினர்!! இதோ, தம்பி! உணவுப் பிரச்சினையிலே இருந்து ஊழல் பிரச்சினைவரை, சதாசர் சமிதிப் பிரச்சினையிலே இருந்து சமுதாய நலத்திட்டம் வரையில், கருத்தடைப் பிரச்சினையிலே இருந்து காவல் படைப் பிரச்சினை வரையில், இத்தனை முரண்பாடு பேசப்படுகிறதே, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில், ஒரு வார்த்தை பேசச் சொல்லு, பார்ப்போம்! என்னய்யா வேடிக்கை இது, நாலும் நாலும் ஏழு என்கிறார் ஒருவர், ஒன்பது என்கிறார் மற்றொருவர், இந்த இலட்சணத்தில் இருக்கிறதே உங்கள் கட்சிக் கோட்டைக்குள்ளே பிளவு, தகராறு, பேதம் என்று—சே! சே! இது பிளவும் அல்ல, பேதமும் அல்ல—இது தான் உண்மையான ஜனநாயகம் என்று கூறுவர்! கூறுவரா? முழக்கமே எழுப்புவர்!
வேறொரிடத்திலே உள்ள ஒரு காங்கிரஸ் முகாமிலே, தம்பி! இந்த ஜனநாயகத்தை மேலும் சற்று விறுவிறுப்பாக நடத்திக் காட்டினராம்! அந்த ஜனநாயகத்தின் அருமை பெருமையை உணர முடியாத ஒரு காங்கிரஸ் தலைவர்.
என்று மற்றொர் காங்கிரஸ் தலைவர்மீது புகார் செய்திருக்கிறார்.
இப்படி பலாத்காரம் — வன்முறை — நடக்கலாமா என்று கேட்டுப் பார் தம்பி! உடனே பதில் பளிச்சென்று