பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

கிடைக்கும் “இது வன்முறையா! சே! சே! இது அன்புப் பெருக்கு!” என்று.

பத்திரிகைகளில் விவரம் கொடுத்திருக்கிறார்—அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரிடமும் புகார் தரப்பட்டிருக்கிறதாம்—கமிட்டிக் கட்டத்திலே நடைபெற்ற ‘காங்கிரஸ் ஜன நாயகம்’ பற்றி.

‘அடித்துப் பேசினார்’ என்று எழுதுவதுண்டல்லவா? ஒரிசாவில் நடைபெற்ற கமிட்டிக் கூட்டத்தில், ஒருவர் பேசினார்—இன்னொருவர் அடித்தார்!!

தம்பி! ஒரு புதிய ‘கதாநாயகரை’க் கண்டெடுத்து, பொட்டிட்டுப் பூமுடித்துக்கொண்டு வந்து காட்டினார்கள் மக்களிடம்.

இதோ பாருங்கள் இந்த நாயகனை!

கட்டுடல் காணுங்கள், கண்ணொளி பாருங்கள்.

இவர் இளைஞர்! ஏறுநடை! எதற்கும் அஞ்சா உள்ளம்!

ஆபத்துகள் இவருக்குப் பூச்செண்டு! ஆற்றல் இவருக்கு அபாரமாக உண்டு!

எதிரிகளை முறியடிப்பதில் இவருக்கு இவரே இணை,

வீழ்ந்துகிடந்த காங்கிரசை நிமிர்த்தி விட்டார்!

வீரட்டி விரட்டி அடித்து வெற்றிகொண்டார், காங்கிரசை எதிர்த்தோரை.

பொருளாதாரப் பிரச்சினைகள் இவருக்குக் கற்கண்டு.

தொழில் நிபுணர்! நாட்டுக்குத் தோன்றாத் துணைவர்.