பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

வாதிடுவதில் வல்லவர்! வரிந்து கட்டிப் போரிடுவதில் திறமை மிக்கவர்.

நேருபண்டிதரே இவரிடம் யோசனைகள் கேட்கிறார்; அத்தனை நுண்ணறிவு இவருக்கு.

டில்லி அரசாங்கப்பணிமனையில் இவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு! அங்கு இவர் விருப்பம்போல் செல்வார், உணர்ந்ததை உரைப்பார், அதனைத் துரைத்தனம் ஏற்றுக் கொள்ளும்.

இவ்விதமாகவெல்லாம், அர்ச்சனைகள் செய்து அரங்கமேற்றினர்; அவரும் ஆடினார் வேகமாக, காங்கிரசின் எதிரிகளைச் சாடினார் மும்முரமாக, காமராஜர் புகழையும் பாடிக் காட்டினார், கழகத்தை ஒடுக்கிட வழியும் கூறினார், அமெரிக்கா சென்றார், ‘பாரதம்’ உய்ந்திடும் வழி கண்டறிய. தேர்தல் களம் நின்றார், வென்றார், முதலமைச்சர் ஆனார்! ஒரிசாவின் பட்நாயக் தம்பி, நினைவிற்கு வருகிறதா!

அவர் மீது தான் புகார் கிளம்பியிருக்கிறது; ‘அடிதடி ஜனநாயகம்’ நடத்தினார் என்று.

ஒவ்வொன்றுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு புது ‘வியாக்யானம்’ கொடுக்கிறார்களே, இவர் என்ன வியாக்யானம் தருவாரோ, யார் கண்டார்கள்!

சீனப் பகைவன் தாக்கினால், என் நண்பரால் தடுத்துக் கொள்ள முடிகிறதா, தாங்கிக் கொள்ள முடிகிறதா என்று பரீட்சை பார்க்கவே பாய்ந்தேன், அடி விழுந்திருக்கும் போலிருக்கிறது அவசரத்தில். இதனை நான் தாக்கினதாக நண்பர் எண்ணிக் கொண்டார்; இது தாக்குதல் அல்ல; தேசியப் பாதுகாப்புத் துறைக்கான பயிற்சி!!

இப்படி ஒரு விளக்கம் கொடுப்பாரோ என்னவோ யார் கண்டார்கள்!!

இவ்விதமாகவெல்லாம், தம்பி! அந்த இடத்து விவகாரம் இருந்து கொண்டு வருகிறது. ஆனால், பேச்சு