இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
124
மட்டும் இருக்கிறது, எம்மை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ஆட்சி நடத்த? என்று. நாலும் நாலும் ஏழா ஒன்பதா என்று விவாதிப்பது போன்ற நிலையிலும் ‘அடிதடி ஜனநாயக’ முறையிலும் இருந்து கொண்டே, பேச்சு மட்டும் இத்தனை சத்தத்துடன் இருக்கிறது. இரவல் நகைக்கே இத்தனை குலுக்கென்றால் சொந்தத்தில் நகை என்றால் சுருண்டு விழுவாள் போல இருக்கிறது என்று பேசிக்கொள்வார்கள், கொச்சையாக—அவ்விதம் இருக்கிறது இவர்கள் விவகாரம். ஆனால் தம்பி! அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். நீயும் நானும், மாறி மாறி இவர்களால் ‘கைது’ செய்யப்படுகிறோம்; சிறையில் தள்ளப்படுகிறோம்!! தெரிந்து கொள்!
6-9-1964
அண்ணன்,
அண்ணாதுரை