136
போகிற போக்கைப் பார்த்தால் இவ்விதந்தான் இருக்கிறது என்பதைச் சிலரேனும் உணர முடிகிறது. பற்றற்றவர்கள் சாதுக்கள், இவர்களைப் பரிபாலனத் துறையில் ஈடுபடுத்தினால், ஊழல், ஒழுங்கீனம், இலஞ்சம் போன்றவைகள் நெளியாது என்றும் எண்ணிடத் தோன்றும். ஊழலையும் ஒழுங்கீனத்தையும் இலஞ்சத்தையும் முறைகேட்டினையும் கண்டறிந்து ஒழித்திட வல்லவர்கள் சாதுக்களே என்ற எண்ணம், வளர வளர ஊழலைச் செய்திடுவோர் எவர்? சம்சாரிகள்! ஏன்? அவர்கள் ஆசைக்கு ஆட்பட்டவர்கள்! ஆசைக்கு ஆட்பட்டவர்கள் வேலைகளில் உள்ள மட்டும், ஊழல் இருக்கத்தான் செய்யும் எனவே, ஆசைகளைத் துறந்த சாதுக்களை, சர்க்கார் அதிகாரிகளாக்கிடுவோம்—ஊழல் ஏற்பட வழியே எழாது என்ற எண்ணம் உருவாகிடத் தான் செய்யும். எங்கும் எவரும் இதுபோல எண்ணிட மாட்டார்கள் என்றுரைப்பர், தம்பி! இதுபோல எண்ணியது மட்டுமல்ல, இதற்கொப்பான ஒரு ஏற்பாட்டையே மேற்கொண்டார் இங்கிலாந்து நாட்டில் கிராம்வெல் எனும் பட்டமற்ற மன்னன்—பாதுகாவலன்.
பொருளாசை கொண்டோர் புனிதப் பணியாற்றிட மாட்டார்கள்—புனிதப் பணியாற்றி வரும் பாதிரிமார்களைக் கொண்டே ஆட்சி முறை கண்டிடல் வேண்டும். அவர்களே அறநெறி அறிந்துரைப்பர், அப்போதுதான் அறநெறி வழுவாத நிலை ஆட்சியிலும் சமூகத்திலும் இருக்கும் என்று திடமாக நம்பிய கிராம்வெல், பாராளு மன்றத்தைத் திருத்தி அமைத்தார்-பாதிரிமார் பார்லிமென்ட் என்றே பெயரிடப்பட்டது அதற்கு; வரலாறு.
எனவே, சாதுக்களைச் சர்க்கார் நடத்திட அழைப்பாரோ! என்று கட்டுரையாளர் கேலிக்காக இதுபோல் கூறுகிறாரே என்று ஐயம் கொள்ள வேண்டாம். தங்கு தடையின்றி, கேட்பார் மேய்ப்பாரின்றி, இந்தப் பின்னோக்கிச் செல்லும் பயணம் மேற்கொள்ளப்படுமானால், கட்டுரையாளர் குறிப்பிடும் கட்டம் பிறந்திடக்கூடும். கிராம்வெல் செய்தே பார்த்தார். நடந்தது என்னவெனில், ஆட்சி மன்றத்தில் அமர்ந்ததும், பற்றற்ற பாதிரிமார்கள் தத்தமது விருப்பு வெறுப்பினைக் காட்டிடவும் அதற்காக வாதிடவும், போரிடவும் முனைந்து பாராளுமன்றத்தைப் படுகளமாக்கிவிட, கிராம்வெல் கலக்கமும் துக்கமும் கொண்டு, அந்தப் பார்லிமெண்டையே கலைத்துவிட்டு,