140
என்பதனை எடுத்துரைக்கிறார். பிறகு சாதுக்கள் உண்மையாகவே நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்ல தொண்டாற்ற விரும்பினால், அதற்கு ஏற்ற இடம், நிர்வாகத்துறை அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். என்னென்ன செய்யலாம் இந்தச் சாதுக்கள் என்பது பற்றியும் கூறுகிறார்.
இந்து மார்க்கத்தில் மூண்டுவிட்டுள்ள அழுக்குக் குட்டைகளை ஒழித்திடப் புனிதப் போர் தொடுக்கட்டும்,
திருக்கோயில்களிலே ஊழல் ஆட்சி நடத்தும் பூஜாரிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தட்டும்.
மார்க்கத்தைத் தவறான வழியிலே நடத்திச் செல்வதை, வறுமை, அறியாமை ஆகியவற்றின் பிடியிலே சிக்கியுள்ள மக்களைச் சுரண்டிடும் கொடுமையைக் கொதித்தெழுந்து எதிர்த்திடட்டும்.
தீண்டாமையை எதிர்த்துப்போரிடட்டும்!தம்பி ! இந்த அளவுக்குத் துணிந்து நீயோ நானோ கூறினால், எத்தனை ஆத்திரம் பீறிட்டுக்கொண்டுவரும், பழமை விரும்பிகளுக்கு, எண்ணிப்பார்! மதத்திலே ஊழல்கள் நெளிகின்றன, போக்குவார் இல்லை; சுரண்டல் நடக்கிறது, தடுப்பார் இல்லை; மூடத்தனம் மூடுபனியாகக் கிடக்கிறது, அறிவு ஒளி அளித்திடுவார் இல்லை. சாதுக்கள் இந்த நிலையை மாற்றிடப் புனிதப்போர் புரிந்திடவேண்டும்; அதற்கு ஏற்றவர்கள் அவர்கள் என்ற கருத்துடன் கட்டுரையாளர் எழுதுகிறார்.
என்கிறார். சாதுக்களுக்கும் கோபம்வரும், மார்க்கக் காவலர்க்கும் மன உளைச்சல் ஏற்படும்; என்ன அக்கிரமம் குப்பை கூளங்களை அகற்றிடும் வேலையையா செய்யச் சொல்கிறீர், மன அழுக்கைப் போக்கிட அவதரித்துள்ள மகான்களை என்று வெகுண்டுரைப்பர். என்ன செய்வது,