பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

கட்டுரையாளர் இவர்களின் கடும் கோபத்தைப் பொருட்படுத்துபவராகத் தெரியவில்லை, தயக்கம் தடுமாற்றமின்றி, அச்சம் கூச்சமின்றிக் கூறுகிறார்.

வீதிகளிலே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த,

சுவர்களிலே ஒட்டப்பட்டுக் கிடக்கும் ஆபாசச் சுவரொட்டிகளைக் கிழித்தெறிய,

வீதியிலே திரிந்து கொண்டிருக்கும் நாய்களை விரட்ட,

ஊருக்கு நல்ல குடி தண்ணீர் கிடைத்திடும் வழி தேட,

இந்தப் பணிகளில் ஈடுபட முன் வரட்டும் சாதுக்கள் என்று கூறுகிறார்.

நாடும் சமூகமும் நல்ல நிலைபெற, எதிர்காலம் ஒளிமிக்கதாக இருந்திட, விஞ்ஞானத்தின் துணைகொண்டு, இன்னலைக்கண்டு அஞ்சாத மனப்பான்மையுடன் பணியாற்றி முன்னேற்றம் காணவேண்டுமேயன்றி, சாது சன்னியாசிக் கூட்டத்திடம் கைகட்டி வாய்பொத்தி நின்று, காட்டுமிராண்டிக் காலத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றிடக் கூடாது; நேரு பண்டிதர் நமக்கு அளித்துச் சென்ற அறிவுரை அதுவே; அவர் காட்டிய வழி நடப்போம்; மக்கள் காண அவர் உரைத்த இலட்சியங்களைக் காட்டுவோம். முன்னேற்றப் பாதையிலே நாம் நடைபோட நமக்கெல்லாம் துணிவு அளித்த நேருவின் உருவத்தை மக்கள் காணட்டும், கர்நாடகக் காலத்துக்கு நம்மைத் தள்ளிச் செல்லும் சாதுக்களின் உருவத்தை அல்ல—என்று மிக உருக்கமாகக் கூறுகிறார். நந்தாவின் உள்ளம் நொந்துபடும்—சாதுக்கள் கோபித்துக் கொள்வர் என்றாலும் உள்ளத்தில் பட்டதை உரைத்திடுவேன் என்கிறார் கட்டுரையாளர்.

தம்பி! சாது சன்யாசிகளைப் படைதிரட்டி, நாட்டிலே நெளியும் கேடுகளை ஒழித்திடப் போரிடும்படி நந்தா கூறுவது கேட்டு, முற்போக்காளர் அனைவரும் நயனதாரா வெளியிட்டது போன்ற கருத்தினையே பெறுவர், கவைக்குதவாத திட்டமாக இருக்கிறதே உள்-