பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

காலமறிந்து, நிலைமை புரிந்து, தன்வலி மாற்றார் வலி சீர் தூக்கிப் பார்த்து, கழகம் தன் செயல் முறைகளை வகுத்துக் கொள்கிறது. வரிசைப்படுத்திக் கொள்கிறது, நிலைத்து நின்று பணிபுரிய, எவ்வப்போது என்னென்ன விதமான முறைகளை மேற்கொள்ள வேண்டுமென்று, திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது இந்த முறை காரணமாக, மாற்றார் வெட்டிடும் படுகுழியில் வீழ்ந்து அழிந்துபடாமல், சூது வலையில் சிக்கிடாமல். முன்பின், வலம் இடம், மேல் கீழ், தன்வலி துணைவலி, காலம் நிலைமை என்பவைகளைக் கணக்கெடுத்து, எதனை எப்போது எவ்விதம் எவரெவர் செய்து முடிப்பது என்று திட்டம் வகுத்துக்கொண்டு செயலாற்றுகிறது. இதனைத் திரித்துக் கூறியும் வருகின்றனர், மக்கள் தெளிவு பெறமாட்டார்கள் என்ற தப்பு எண்ணத்தில்.

பொய்! பொய்! முழுப்பொய்! கலப்படமற்ற பொய்—என்று உரத்த குரலிலே கூவினான்—கோபம் அல்ல கோபம் கொண்டவன் போல! மூட்டி விடுவான்!

எது பொய்? என்ன பொய்? என்று சிறிது அச்சத்துடன் கேட்டான், கேட்டு மருள்வான்.

என்ன சொன்னான் உன்னுடைய மன்றத்தான்? என்று கேட்டான் மூட்டிவிடுவான்; திருக்குளத்தில் செந்தாமரை மலர்ந்து இருக்கிறது, அழகாக! என்று சொன்னானல்லவா? என்றான்.

ஆமாம்! அப்படித்தான் சொல்லக் கேட்டேன் என்றான் கேட்டு மருள்வான்;

ஏமாந்து போனாய்! ஏமாற்றி விட்டான்! ஏமாளி யானாய்!! என்று அடுக்கினான் மூட்டி விடுவான்.

எப்படி? எதிலே ஏமாந்து போனேன்? என்று கேட்டான், கேட்டு மருள்வான்.

திருக்குளத்துத் தாமரை இதழ் விரித்து அழகாக இருக்கிறது என்று கூறி உன்னை ஏமாற்றினானே, மன்றத்தான், அதைத்தான் கூறினேன்; கேள் அவனை, இப்போது; தாமரை மலர் இதழ் விரித்து இருக்கிறதா