12
என்று கேள். அவனைக் கேட்பானேன். வா, என்னோடு, திருக்குளம் செல்வோம்; காட்டுகிறேன், நீயேபார்! தாமரை இதழ் விரித்து இல்லை!! வந்து பார்! என்றான் மூட்டிவிடுவோன், கேட்டுமருள்வோன் கிளம்பினான், திருக்குளம் நோக்கி சிறு விளக்கொன்று தேவை—இருட்டு அல்லவா? என்று கவனப்படுத்தினான் மூட்டிவிடுவோன்—விளக்குடன் இருவரும் கிளம்பினர், திருக்குளத்தருகே சென்றதும் மூட்டிவிடுவோன், சுட்டிக்காட்டி, பார் நன்றாக! எங்கே, இதழ் விரித்த தாமரை இருப்பதாகச் சொன்னானே உன்னை ஏமாளியாக்க ; எங்கே விரிந்த தாமரை? என்று இடித்துக் கேட்டான்.
விரிந்த தாமரை இல்லை—குவிந்த தாமரையே தெரிந்தது.
கேட்டுமருள்வோனுக்கு மெத்த வருத்தம் ஏற்பட்டது. ஏன், மன்றத்தான், தாமரை அழகாக விரிந்து மலர்ந்து காட்சி தருகிறது என்று நம்மிடம் கதை கதையாகச் சொல்லவேண்டும்! சே! இது ஏன் இந்தச் சூதுப் பேச்சு—இதை நம்பி, நாம் பலரிடம், செந்தாமரை விரிந்து மலர்ந்து அழகாகத் திருக்குளத்திலே இருக்கிறது என்று கூறி வைத்தோமே. இப்போது, நாமல்லவா ஏமாளியானோம்—என்று எண்ணி மனம் வெதும்பினான்.
இனியாகிலும் உணர்ந்துகொள், மன்றத்தான் பேசுவது பொய் என்பதை! - என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தான் மூட்டி விடுவோன்.
எது அப்பா, பொய்? என்று கேட்டபடி வந்தான், தெளிவளிப்பான்.
திருக்குளத்தில், செந்தாமரை இதழ்விரித்து. அழகாக மலர்ந்து இருக்கிறது என்று பொய் பேசி என்னை ஏய்ந்துவந்தான் மன்றத்தான் இங்கு வந்து பார்க்கிறேன், தாமரை குவிந்து கிடக்கிறது. மலர்ந்து, இதழ் விரித்து இல்லை—என்று கோபமும் துக்கமும் கொண்ட நிலையில், பேசினான் கேட்டு மருள்வோன்.
தெளிவளிப்பான் கூறினான், கேட்டு மருள்வோனே! இது இரவுக்காலமல்லவா? இரவுக்காலத்திலே,