17
ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும். இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதால் இந்தி பேசும் மக்கள் நியாயமற்ற வகையில் முன்னணியில் நலம் பெறுவர்.
முதலாவதாக, தேசிய மொழியின்றி இந்தியா ஒரு நாடாக விளங்குவதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆட்சியைப் பொறுத்தமட்டில் ஆங்கிலமே நீடிக்க வேண்டும்.
ஆங்கில மொழியின் நுழைவால்தான் இந்தியத் தேசியம் உருவெடுத்தது. இதன் பயனாகவே இந்தியத் தேசியக் காங்கிரசும் தோன்றியது.கேட்டாயா, கேட்டாயா! ஆங்கிலம், ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமாமே. நாட்டுப்பற்று இருந்தால் ஒரு அன்னிய மொழியை ஆட்சிமொழி ஆக்கவேண்டும் என்று இந்தப் பேராசிரியர் பேசுவாரா? ஒரு தேச பக்தனுக்கு, காங்கிரஸ்காரருக்கு இப்படிப்பட்ட கெடுமதி இருக்குமா! ஆங்கிலம் படித்து அதனால் பிழைப்பு நடத்தும் பேர்வழி இவர்; இத்தகையவர் பேச்சை மதிக்கப்போமா, கேட்கப் போமா, பேசலாமா என்றெல்லாம் வெகுண்டெழுந்து கூறுவர் - உண்மைக் காங்கிரசார் அல்ல—ஒட்டிக்கொள்பவைகள்.
போகட்டும், நமக்கேன் தகறாறு-ஒரு காங்கிரசாரின் கருத்து. அதிலும் ஆங்கிலம் பற்றியுள்ள கருத்தினைத் தான் கூறுவோமே.
ஆங்கிலத்தின் இடத்தை இந்தி வகிக்க வேண்டுமாம்! இதிலே எனக்கு நம்பிக்கை இல்லை.
ஆங்கிலம் இந்த நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.ஒரு காங்கிரசுக்காரரா, மனம் துணிந்து, மரபு மறந்து, ஆங்கிலம் இந்நாட்டுத்தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஏ! அண்ணாத்துரை, ஏன் இப்படி ஒரு அண்டப்புளுகு பேசி எமது இதயத்தில் வேதனை மூட்டுகிறாய், நம்மை அடிமைப்படுத்திய ஆங்கில மொழியா, தேசியமொழி! ஏகாதிபத்திய