18
மொழியா, எமது தேசியமொழிகளிலே ஒன்று! இப்படியும் கூற ஒரு காங்கிரசுக்காரரின் நாக்கு வளைகிறதா! ஐயகோ! என்ன நாக்கய்யா அது! என் செவியில், ஜனகணமனவும் வந்தேமாதரமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக என்ற முழக்கமும் விழுந்து விழுந்து, புனிதத் தேனைச் சொரிந்தது—அந்தச் செவியிலா இந்தச் செந்தேள் நுழையவேண்டும்! என்னே கொடுமை! என்ன அநீதி! ஆங்கிலம் நமது தேசிய மொழிகளிலே ஒன்றாக்கப் படவேண்டும் என்று சொன்னவர், காங்கிரசில் உறுப்பினராக இருக்கலாம்-புதிதாகப் புகுந்தவராக—பதவிப்பசை தேடிவந்தவராக — இருக்கலாம் — ஆனால் நிச்சயமாக அவர் உண்மையான காங்கிரசுக்காரராக, ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய வீரராக இருக்கவே முடியாது. அது யாரோ ஒரு போலி! ஒரு இடந்தேடி! ஒட்டுச்சரக்கு!—என்றெல்லாம் ஆத்திரம் பொங்கி வழிய, காங்கிரஸ் நண்பர் கூறக்கூடும். அவருடைய ஐயப்பாட்டினையும் போக்கிவிடுவது நல்லதல்லவா, தம்பி! ஆங்கிலம் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று பேசியவர், புதியவருமல்ல, புசிக்க ஏதேனும் கிடைக்கும் என்பதற்காக நேற்றுப்புகுந்தவருமல்ல — உண்மைக் காங்கிரஸ்காரர்—முன்னணியினர்—மூலவர்களிலே ஒருவர்—நாடாளும் நற்பேறுகொண்டவர், பம்பாய் மாநில முதலமைச்சர் சாவன்! ஆம், தம்பி! இப்போது மத்திய சர்க்காரில் பாதுகாப்பு அமைச்சராக உள்ள அதே சாவன் தான்—நாகபுரியில் பேசினார் மூன்றாண்டுகளுக்கு முன்பு —19—8—61 இதழ் பார்த்தால் புரியும். அவருடைய அந்தக் கருத்தினைப் பாராட்டியும் வரவேற்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளியிட்டது.
என்பதாக.
தம்பி! நாம் அதுபோலக்கூட ஆங்கிலத்துக்கு மேம்பாடான இடமளிக்க வேண்டும் என்று வாதாடவில்லை—அதற்காகப் போராடவில்லை; நமது தாய்மொழியாம் தமிழ் மொழியையும் ஆட்சிமொழியாகக் கொள்ளுங்கள், அந்தக்காலம் வருகிறவரையில், வேறோர் பகுதி மக்களின்