20
நீங்கள் இந்தியை உங்கள் பிரதேச மொழியாகவும் கொண்டிருக்கிறீர்கள். அதே போது மத்திய ஆட்சிமொழியாகவும் ஆக்கிக் கொள்கிறீர்கள். இது உங்களுக்கு ஒரு ஆதிக்க உயர்வைத்தருகிறது.
ஒன்றை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்; ஒருவன் எவ்வளவுதான் இந்தியையோ வேறு மொழியையோ கற்றுக் கொண்டாலும், அது அவனுடைய தாய்மொழியாக இருந்தாலொழிய, ஒவ்வொரு நாளிலும் இருபத்து நான்குமணி நேரமும் அவன் பயன்படுத்தும் மொழியாக இருந்தாலொழிய, அவன் துரைத்தன அலுவலகங்களில் மேலிடம், உயரிடம் பெறமுடியாது; மற்ற வேலைத்துறைகளிலும் கூடத்தான்.காமராஜர் மிக்க விருப்பத்துடன் கிளப்புகிறாரே சோற்றுப்பிரச்சினை, அது மொழிப் பிரச்சினையோடு எப்படிப் பிணைந்திருக்கிறது என்பதை சங்கர்ராவ்தேவ் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டினார். அவருடைய பேச்சை மதித்து ஏற்றுக்கொண்டார்களா? அவர்களா! ஆதிக்க நோக்கம் கொண்டவர்கள் அறிவுரை கேட்டு அதன்படி நடந்துகொள்வார்களா!!
இந்தியை ஆட்சிமொழி ஆக்குகிறார்கள் என்ற காரணம் காட்டி, நாட்டிலே ஒரு பகுதியின்மீது மற்றோர் பகுதிக்குக் கசப்பு ஏற்படும்படி செய்கிறார்கள் என்று ஒருமைப்பாட்டு உரை நிகழ்த்துவோர் குற்றம் சுமத்துகிறார்கள்.
சரியாகவோ தவறாகவோ, இந்தி புகுத்துவதற்காக நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது, இந்தி பேசாத பகுதி மக்களிடையே ஒரு உணர்ச்சியை மூட்டி விட்டிருக்கிறது; அதாவது இந்தியாவின் கூட்டுக் கலாச்சாரத்துறையில், மற்ற வலிவுள்ள மொழிகள் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கவே இந்திக்காக இப்படிச் சண்டைபோடுகிறீர்கள் என்ற உணர்ச்சி.
ஐயா! தெற்கே உள்ள இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தமான மொழியை (இந்தியை) நீங்கள் தேசிய மொழி என்ற அளவுக்கு அந்தஸ்து தருவதுதான், இந்தி பேசும் மக்களுக்கும்