40
ஏன்யா, சட்டம் சட்டம்னு பேசி வயற்றெரிச்சலைக் கிளப்பறே!
போய்யா, நீயும் உன்னோட சட்டமும்.
என்னய்யா செய்துவிடும் உன்னோட சட்டம்?
ஆமாம்! மீறப்போறேன் உன் சட்டத்தை! செய்ய முடிந்ததைச் செய்துகொள்ளு, போ!
சட்டம் சட்டம்னு பயந்து சாகச் சொல்றயா?
உயிரைத்தானேய்யா பறிச்சிக்கும் உன் சட்டம்? செய்யட்டும்!!
கிளம்புங்க, நமக்காகச் சட்டமா? சட்டத்துக்காக நாமா? என்பதை ஒருகை பார்த்தேவிடுவோம்!
✽✽✽
தம்பி! முற்பகுதியில், சட்டத்தின் மேம்பாடுபற்றிக் கூறியிருப்பதற்கும், பிற்பகுதியில், சட்டத்தைத் துச்சமென்று கருதும் மனப்போக்கு எழத்தக்கவிதமாக எழுதியிருப்பதற்கும் பொருத்தம் காணோமே—சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு என்பதற்கான அழுத்தமான காரணங்களைக்காட்டிவிட்டு. சட்டத்தைக் கேலிசெய்தும் கேவலப் படுத்தியும், மீறத்தக்கது ஒழித்திடவேண்டியது என்ற முறையிலும் எழுதியிருப்பது முறையாகத் தெரியவில்லையே என்று எவருக்கும் கேட்கத் தோன்றும்.
பொறுத்தமற்றதை, முறையற்றதை எழுதும் பழக்கம் எனக்கும் இல்லை என்பதை நீ நன்கு அறிந்திருக்கிறாய்—எனவே, ஏன் நான் இவ்விதம் எழுதினேன் என்று எண்ணிப்பார்த்தால் உண்மை விளங்கும்.
சட்டம், சமுதாய ஏற்பாடாக, கட்டுக்கோப்பு கண்ணியம் ஒழுங்கு நீதி நியாயம், நேர்மை ஆகியவற்றினைப் பாதுகாத்திடத்தக்கதாக அறநெறி மேற்கொள்வதாக அமைந்திருக்குமானால், அப்படிப்பட்ட சட்டத்தை அனைவரும் வரவேற்றுப் போற்றி அதன் கட்டுக்கு அடங்கிச் சமூக மேம்பாடு எழில்பெற ஒழுகவேண்டும்— ஒழுகிவருகின்றனர் மிகமிகப் பெரும்பாலோர். ஆனால் சட்டம், தான்தோன்றித்தனமாக, ஆணவப் போக்குடன், ஆய்ந்து பார்க்காமல், ஆதிக்க வெறிகொண்டு, அக்கிரமத்-