44
நேர்மாறானது விளைவது காணும்போது இப்பேச்சு எழுகிறது.
இவருடைய சட்டமப்பா இது?—என்று கூறும்போது. சட்டம் இயற்றுபவர்கள் மீது தமக்குள்ள அலட்சியத்தை வெளியிடுகிறார்கள். ஆணவக்காரன் அல்லது அசடன்—இவன் சட்டம் இதுபோலத்தான் இருக்கும் என்ற பொருள்பட.
எத்தனையோ சட்டத்திலே இது ஒன்று. அடுக்கடுக்காகச் சட்டங்களைக் குவித்துவைத்திருக்கிறார்கள் தேவையற்று, என்பதைக் குறிக்க இதுபோலக் கூறுகிறார்கள்.
ஏன், போட்டுவிடேன் சட்டம் இதற்கும்?- என்று கேட்பவர், அதிகாரத்திலிருப்பவர், எந்த நியாயம் கேட்டாலும் உரிமை கேட்டாலும் அதை அடக்கிட சட்டத்தைக் கருவியாக்கிக்கொள்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அத்துடன், அதிகாரத்திலிருப்பவரிடம் மதிப்பு மங்கி வருகிறது என்பதையும் காட்டுகிறார்.
தம்பி, இப்படியே விளக்கம்பெற, ஒவ்வொரு பேச்சையும் படித்துப் படித்துக் கருத்தினை ஆராய்ந்தால், திகைப்பு வியப்பு, ஏக்கம், வெறுப்பு, அலட்சியம், கோபம், எதிர்ப்பு துணிவு எனும் ஒவ்வோர் வகையான உணர்ச்சியும் இந்தப் பேச்சுக்களிலே உள்ளடங்கி இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
பொறுத்துப் பார்த்துப் பார்த்து, முறையிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து, எரிச்சல் மூட்டப்பட்டு இறுதியில் என்ன நடந்தாலும் நடக்கட்டும் எதிர்த்தே தீருவது என்ற துணிவு பிறந்து, அந்தக் கட்டத்தின் போது தான்,
என்பன போன்ற பேச்சுக்கள் எழுகின்றன; செயலும் நிகழ்கிறது.
இந்த நிலைக்கு மக்களைத் துரத்தக்கூடியதாக, சட்டம் இயற்றக்கூடாது.
இந்த நெறியை ஆட்சியினர் மறந்து, கண் மூடித்தனமாகச் சட்டம் இயற்றினால், அந்தச் சட்டம் ஏட்டில்