பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உயர்ந்த நிலையிலுள்ள ஒரு காங்கிரஸ் தலைவரிடம் நமது கழகத் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் காங்கிரஸ் தலைவர் கூறினாராம், “நீங்கள் ஆட்சியைக் கைப்பற்றினாலும், நாங்கள் நொடியில் அதைக் கவிழ்த்து விடுவோம்” என்பதாக.

இவை நடைபெறுகின்றன என்றே வைத்துக் கொள்வோம். — எல்லாம் பொதுமக்கள் அனுமதி கொடுத்தால் தானே!—யாருக்கு இதனால் நட்டம்? கழகத்துக்கா? இம்மி அளவும் இல்லை!! கழகம், பொதுமக்கள் விரும்பி, அதற்கு எந்த நிலையை அளித்தாலும், எந்தச் செயலைச் செய்திடப் பணித்தாலும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறது.

தம்பி! இந்தப் பேச்சுகளிலிருந்து நமக்கு இப்போதிருந்தே, காங்கிரஸ் கட்சி தி. மு. க, ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்பது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியிருப்பதிலிருந்தே, காங்கிரசுக்கே ஒரு பலமான எண்ணம் கழகம் ஆளுங்கட்சியாகிவிடும் என்ற எண்ணம் வலுத்துக் கொண்டு வருகிறது என்பது புரிகிறதல்லவா!

அந்த எண்ணம் காரணமாகவே மனக் குமட்டல்.

அதிகாரத்தைப் பெற்றவர்களுக்கு, அதை இழந்திட மனமும் வராது—இழந்துவிடச் செய்யும் ஆற்றல் எவருக்கும் இல்லை என்ற எண்ணமே தடித்து இருக்கும்,

ஆனால் அந்த எண்ணத்தைக் கண்டு, பொது மக்கள் தமது போக்கை மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள், உரிமையை இழந்துவிடவும் மாட்டார்கள்.

கோபமில்லாத பழைய காங்கிரஸ்காரர் யாரையாவது பார்த்தால் இதைக் கேள், தம்பி! தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் என்னய்யா என்று?

அவருக்கே கூடக் கொஞ்சம் சங்கடம் கலந்த கோபம் முதலில் கிளம்பும்—காங்கிரசின் சேவைபற்றி விளக்குவார்—மரியாதையுடன் அதைக் கேட்டுவிட்ட பிறகு—ஐயா! அந்தக் காங்கிரசா இப்போது இருக்கும் காங்கிரசு? என்று கேள்—சாந்தம் ஏற்படும்—பிறகு மறுபடியும் கேள், தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் என்ன தவறு? ஏன் வரக் கூடாது? வரக்கூடாது என்று உங்கள் தலைவர்கள் சிலர்