பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

இந்த ஆண்டு கள்ளமார்க்கெட் செய்பவர்களைக் கண்டுபிடித்து, அடக்கி, விலைகளை இந்த அளவுக்குக் குறைந்திடச் செய்திருக்கிறோம்,

இந்த ஆண்டு இத்தனை மருத்துவமனைகள் அமைத்து, இன்னின்ன லியாதிகளினால் ஏற்படும் கேடுகளைக் குறைத்திட முயன்றிருக்கிறோம் என்றெல்லாம் பேசவேண்டிய இடத்திலே, தம்பி! என்ன பேச்சு நடைபெற்றிருக்கிறது, பார்த்தனையா!!

முதலமைச்சர் அக்கிரம வழியிலே பணம் திரட்டினார், அரண்மனைபோன்ற வீடு கட்டினார்—என்பது பேச்சு!! இவர்கள், காங்கிரஸ் அமைச்சர்கள்! இந்த இலட்சணமான ஆட்சியைக்கண்டு, மார்தட்டிக்கொள்ளவும், மற்ற எந்தக் கட்சியும் ஆட்சி செய்திடும் ஆற்றல் பெற்றது அல்ல என்று மமதை பேசவும், நாக்கு நீளுகிறது பெருந்தலைவர்களுக்கு, மக்களுக்கு எதுவுமே புரியாது என்று அவர்கள் ஒரு தப்புக்கணக்குப்போடும் காரணத்தால்.

தம்பி! வீடுகட்டிய விந்தையுடன் முடிந்துவிடவில்லை. ராஜஸ்தானத்து ரசாபாசம்.

கம்யூனிஸ்டு கட்சியினரான இரண்டு உறுப்பினர்கள்,

பதுக்கல்காரர்கள், திருட்டுச் சரக்கு விற்பவர்கள், கள்ள மார்க்கட் நடத்துபவர்கள், கொள்ளை இலாபம் அடிப்பவர்கள்... இவர்களுக்கு முதலமைச்சர் சுகாடியா, தாமே முன்னினறு பாதுகாப்பு அளித்து வருகிறார்

என்று குற்றம் சாட்டினார்கள்.

குல்ஜாரிலால் நந்தா, சாதுக்களைப் படை திரட்டி, சென்று சேகரிப்பீர் செய்திகளை! என்று அனுப்புகிறாராம்! ஏன்? இதோ சட்ட மன்றத்தில், இரு உறுப்பினர்கள், வெளிப்படையாக, விளைவுபற்றி அஞ்சாது, வீரத்துடன் பேசியிருக்கிறார்களே, அவர்களை அழைத்து முழுத் தகவல் தரச் சொல்வதுதானே! அதன்பேரில் விசாரணை தொடங்குவதுதானே! செயல்பட முனைவது தானே! செய்தாரா? செய்வாரா? செய்யமாட்டார்! நந்தா செய்யக்கூடியதெல்லாம், அந்த இரண்டு கம்யூனிஸ்டு உறுப்பினர்களை, இவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை மூட்டுகிறார்கள் என்று கூறி, சிறையில்