பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

ம:– பல்லை எடுத்துவிடலாமே...புது டாக்டர் வந்திருக்காரு பாருங்க, ரொம்பக் கெட்டிக்காரரு...

த.தா:– உனக்குத் தெரிந்தவர்தானா...

ம:– அதென்ன அப்படிக் கேட்டுவிட்டிங்க. நம்ம ஊருக்கு ஒருநல்ல டாக்டர் வேண்டுமென்று நானே நேரிலேபோய் மந்திரியைப் பார்த்து, இவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேனே.

த.தா:– அப்படியா...ரொம்ப நல்லதாப்போச்சி...

ம:– தேர்தல்வேலை மும்முரம், தெரியுமே உங்களுக்கு...

த.தா:– ஆமாமாம்! ஆனா விலை ஏறிவிட்டுது என்கிற கோபம், வருத்தம் ஜனங்களுக்கு. காங்கிரசுமீது வெறுப்பு இருக்குது. உனக்கா தெரியாது...

ம:– கஷ்டப்படுகிற ஜனங்க அப்படித்தான், விவரம் தெரியாததாலே வெறுப்புக் காட்டுவாங்க...உங்களைப்போன்ற பெரியவங்கதான் நல்லபடி சொல்லி ஜனங்களைத் திருத்தவேணும்...

த.தா:– இந்த ஜனங்களை இந்தக் காலத்திலே திருத்தப்போனா, நீ முதலிலே திருந்திக்கொள்ளு என்று பேசுதுங்க...

ம:– ஆமாமாம்! இந்தக்காலத்து ஜனங்களோட போக்கைத்தான் பாகவதப் பிரசங்கி பன்னீர்தாஸ் பட்டாபிஷேகத் திருவிழாவின்போது நடத்தினாரே பக்தராமதாஸ் காலட்சேபம், அதிலே புட்டுப் புட்டுக் காட்டினாரே...

த.தா:– கேட்டயேல்லோ.....ராமா! ராமான்னு ராமதாசர் பஜித்ததும் ராமன் நேரிலேயே வந்தாராம்...அந்தக் காலத்திலே...

ம:– நம்ம காங்கிரஸ் ராஜ்யம்கூட, ராமராஜ்ஜியம்தானே...காந்தியே வைத்த பெயராச்சே...

த.தா:– அது சரி மண்டலம்! யாரோ சொன்னாங்க என்னிடம்...நீ என்னமோ ராமசாமிப் பெரியார் கூட்டத்திலே தலைமை வகித்தயாம்.....அவரு ராமனையும் சீதையையும் கண்டபடி திட்டினாராம்