120
...ஏம்பா! நீ கலந்து கொள்ளலாமா அந்தக் கூட்டத்திலே...
ம:– நான் காரணம் இல்லாமலா கலந்துகொண்டேன். வேறே யாராவது தலைமை வகித்திருந்தா, பெரியார் பேச்சை மறுக்க முடியாமல் திக்கித் திணறிப் போயிருப்பாங்க. நான் விட்டேனா! இவ்வளவு பேசற இவருடைய பேரே ராமசாமிதான்! என்று சொன்னேன். ஜனங்க ஒரே ஆரவாரம் செய்தாங்க அந்த ஒரு பேச்சிலே அவருடைய மூன்று மணிநேரப் பேச்சும், போச்சி...
த. தா:– பலே! பலே! சரியான பேச்சுத்தான் பேசியிருக்கறே...
ம:– அது மட்டுமா! மற்றொரு விஷயம் சொன்னேன், ஜனங்க அப்படியே அசந்து போய்விட்டாங்க. கடவுள் அவதாரமான ராமச்சந்திரமூர்த்தி, மகாலட்சுமியான சீதாபிராட்டி, இவர்களைப் பற்றியெல்லாம் கண்டித்துப் பேசுகிற பெரியாரே, நம்ம காங்கிரசு கட்சியைப் பற்றிக் கண்டிக்க முடியவில்லை; பாராட்டிப் பேசறாரு; ஆதரிக்கச் சொல்கிறார். எதையும் கண்டிக்கிற பெரியாரே காங்கிரசை ஆதரிக்கிறபோது, நாடே திரண்டு வந்து காங்கிரசுக்கு ஓட்டுப் போடும் என்பதிலே என்ன சந்தேகம் என்று கேட்டேன். பத்து நிமிஷமாச்சி, கரகோஷம் அடங்க...
த. தா:– ரொம்பச் சந்தோஷம்...வரட்டுமாப்பா...
ம:– ஒரு சின்னக்காரியம் செய்யணும்...நம்ம கோயில் நிலம் இருக்குது பாருங்க...
த.தா:– கொட்டாவூர், கோனூர், பருதூர் மூன்று இடத்திலே இருக்குது, நிலம்...
ம:– சிரமத்தைப் பார்க்காமெ ஒரு நடை நீங்க போய் வந்தா நல்லது...
த. தா:– ஓட்டுக்குத்தானே...சொல்லி அனுப்பிவிட்டால் போகுது.
ம:– நேரிலேயே போய்வந்தா நல்லது...ஏன்னா! மேல் இடத்திலே, உங்களை ஏரியா கமிட்டிக்குப் போட