121
வேண்டும் என்ற எண்ணம் இருக்குது. அந்த இடத்துக்குப் பல்விளக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஆசாமி. உங்களைப் பற்றித் தப்புந்தவறுமா சொல்லி வைத்திருக்கிறான்...
த. தா:– தப்புந் தவறுமாப் பேச என்ன இருக்குது; என்னைப் பற்றி...
ம:– ஒண்ணுமில்லிங்க...அவருக்குத் தள்ளாத வயது...ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. எந்தக் காரியத்தையும் தானே நேரிலே போய்ப் பார்க்க முடிகிறதில்லே என்று கோள்மூட்டி விட்டிருக்கிறாங்க...சில பேர். அதனாலேதான். இந்தத் தேர்தல் வேலையாக நீங்களே அந்த ஊர்களுக்கு நேரிலேயே போய்வந்தா நல்லதுன்னு நினைக்கிறேன்...
த. தா:– அப்படியா விஷயம்...தள்ளாத வயதாமா எனக்கு...எல்லாம் தள்ற வயதுதான்...நடமாட முடியாதாமா...நாளைக்கே கிளம்பிப் போறேன் அந்த மூணு ஊருக்கும், அப்பத் தெரிந்து கொள்ளட்டும், தள்ளாதவனோட வேலைத் திறமையை. பல்வலி இருந்தா என்ன...கொஞ்சம் காசிகட்டித் தூளை அப்பிக் கொண்டாபோகுது வலி தன்னாலே...நாளைக்குக் கிளம்பறேன்...அந்த ஏரியா கமிட்டி விஷயம்?
ம:– அது உங்க காலடியிலே கிடக்குதுங்க. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
★
தம்பி! இத்தனைவிதமான முயற்சிகளிலும், ஆளுங்கட்சியால் ஈடுபட முடிகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் அளவுக்கு, நாம் போட்ட கணக்கினை பொய்யாக்கி விடுகிறது.
- மக்களின் இதயம் நமது பக்கம் இருக்கிறது என்பதிலே ஐயமில்லை. ஆனால், மக்கள் தமது இதயம் இடும் கட்டளைப்படி நடந்து கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி, அவர்களை இக்கட்டிலே சிக்க வைத்துவிடும் காரியம் நடந்துவிடுகிறது.