பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

லுடன் காத்துக் கிடந்தவர்களின் உள்ளம், உலைக்கூடம் ஆகிவிடும்.

பொருளின் அருமை, அதனிடம் ஏற்பட்ட விருப்பம், பொருளைப் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கை, அவனைப் பெறச் சென்றவனின் ஆற்றலிலே வைத்துள்ள நம்பிக்கை, இவற்றின் தன்மையைப் பொறுத்திருக்கிறது, பொருள் பெறாததால் ஏற்படும் ஏமாற்றம், எரிச்சல், கவலை, வேதனை.

பஞ்சவர்ணக் கிளியைப் பக்குவமாகப் பிடித்திடச் சென்று, பாதிமரம் ஏறுகையில், அது பறந்து போய்விட்டது என்றொருவன் கூறும்போது, கேட்பவர்கள், அடடா! அப்படியா! என்று பேசுவர், பரிவுகாட்டி!

ஒரு மணி நேரமாகக் காத்திருத்தேன் கிடைக்கவில்லை என்றொருவன் கூற, எதற்குக் காத்திருந்தாய் ஒரு மணி நேரம் என்று மற்றவன் கேட்க, ஓணானுக்கு என்று முன்னவன் சொன்னால், மற்றவன், பேதையே! பேதையே! இதற்கா இத்தனைக் கவலை கொள்கிறாய்! ஒரு ஓணான் கிடைக்காததற்காகவா!! என்று கூறிக்கை கொட்டிச் சிரிப்பான்.

தர்மபுரியில், தம்பி! நாம் கட்டாயம் வெற்றி பெற்றுத்தருவோம் என்று, வெற்றி பெற்றாக வேண்டும் என்று மெத்தவும் விரும்பி, வெற்றி பெற்றளித்திடுவோம் என்று அழுத்தமாக நம்பிக் கொண்டிருந்தவர்கள் தமிழகத்திலே மிகப் பலர்-கழகத்துக்கு வெளியே கூட. தர்மபுரி வெற்றி இந்த நேரத்தில் மிகவும் விரும்பத்தக்கது என்பதிலேயும், அந்த வெற்றியைக் கழகம் பெற்றளிக்கும் ஆற்றல் உள்ளது என்பதிலேயும், அவர்கள் அவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார்கள்! அதனால்தான், தர்மபுரியில் கழகம் தோற்றுவிட்டது என்ற ‘சேதி’ வந்ததும், அவர்களால் நம்பமுடியவில்லை, கவலை அவர்களை அலைக்கழித்திருக்கிறது.

தர்மபுரியில் தோற்றுப் போனதால், எல்லோருக்கும் ஏற்படுவதுபோல எனக்கும் கவலையும் வேதனையும் ஏற்பட்டது என்றாலும், அந்தக் கவலையும் இடையில்,

மக்கள் கழக வெற்றியை எவ்வளவு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள்,