129
கிருதாவும்கொண்ட ‘ராஜா’ குதித்துக் கூவுவாரே, ராஜாதி ராஜன் வந்தேனே! மகா ராஜாதி ராஜன் வந்தேனே!! என்று அதுபோலாகிவிட்டார்!
வெற்றி! வெற்றி! வேட்டுச்சத்தம் கேட்ட நாட்டில், வெற்றி! வெற்றி! சுட்டுத்தள்ளிய சூரர்கட்கே வெற்றி! வெற்றி! என்று பாடுகிறார். பல நாள், பதைபதைத்துக் கிடந்தவர், இந்தப் பாயசம் பருகட்டும் பாவம்! வேண்டாம் என்பார் இல்லை. ஆனால், இப்படித்தான் வெற்றி கிடைக்கும் என்று முன்பே தமக்குத்தெரியும் என்று பேசுகிறாரே, அது தவறு, தேவையற்றது, பொருளற்றது!
ஆனால், வெற்றிக்களிப்பிலே பொருள் பொருத்தம் பார்க்கவா தோன்றும்; ராமன் பிறவாததற்கு முன்னாலேயே இராமாயணம் எழுதினாராமே வால்மீகி, அதுபோலத் தம்மை எண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, அத்தனை பாராட்டத்தக்கதாகக் கொண்டாடத்தக்கதாக ஏன்தோன்றுகிறது? துளியும் எதிர்பார்த்திராததால்!!
தாளம் துளிகூடத் தவறவில்லை என்று பாராட்டுக் கிடைத்ததும், யாருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கிளம்பும்? இசை மன்னன் சித்தூர் சுப்பிரமணியத்துக்கா!! இன்றைக்கு வரவேண்டிய வித்துவான் வராததாலே, இலுப்பையூர் கருப்பையா பாடுவார்!! என்ற அறிவிப்புடன் பாடத்தொடங்கியவர், ஆனந்தத் தாண்டவம் ஆடுவார், தாளம் தவறாமல் பாடியதாகப் பாராட்டப்பட்டால்.
பொதுத் தேர்தலுக்குப்பிறகு கழகம், காங்கிரசைச் சந்தித்த, தேர்தல் களம்,
- திருச்செங்கோடு
- திருவண்ணாமலை
- சென்னை மாநகர்
- தர்மபுரி
இவற்றில், முதல் மூன்று இடங்களிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது; தர்மபுரியிலே வெற்றிபெற்றது.