பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தாளம் தவறவில்லை என்று தட்டிக்கொடுப்பது போன்ற பாராட்டுதலுக்கு மட்டுந்தான் காங்கிரஸ் உரிமை கொண்டாடமுடியும். அதற்குமேலே கொண்டாடுவது, உப்பை அதிகமாக்குவதாகும்; மணம் நெடியாகிவிடும் நிலைமை!! ஆனால், அதைத்தான் முதல் அமைச்சர் செய்துவருகிறார் — மும்முரமாக!! நெடுநாளைக்குப்பிறகு புதிதாக வளையல்களைக் நிறையப் போட்டுக்கொண்டவள், குலுக்கி நடைநடைந்து கலகல ஒலி எழுப்பிக் காட்டுவதுபோல,

மூன்று முறை கழகம் வெற்றிபெற்றபோது, இந்த ‘முன்கூட்டியே’ இன்னதுதான் நடக்கும் என்று கணித்திடும் வால்மீகி எங்கே போயிருந்தாரோ!!

இத்தனை பிணங்கள் வீழாதிருந்தபோது, மூன்று முறை காங்கிரசைத் தோற்கடித்த பொதுமக்கள், தர்மபுரியில் வெற்றிகொடுத்தார்கள் என்றால், காங்கிரசின் அடக்கு முறையைப் பாராட்டியா! மக்கள் என்ன இதயமற்றவர்களா!! அல்லவே!!

அடக்குமுறைப் பிரச்சினையைக்கூட மறைத்துவிடத்தக்க வேறு ஏதோ நிலைமைகள் உருவாக்கப் பட்டதாலன்றோ மக்கள் காங்கிரசுக்கு வெற்றி தந்தனர். இதனைப் புரிந்துகொள்ள, சராசரி அறிவே போதுமே!

மக்கள் விரும்பவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை; காங்கிரசின் பெருந்தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை; ஆனால், தொகுதியில் வேலை பார்த்துவந்த காங்கிரஸ் தலைவர்கள், தமது வேலை முறைகளைக் கணக்கெடுத்து வெற்றி கிடைத்திடும் என்று எதிர்பார்த்திருக்கக்கூடும்; அவர்கள் கூறியிருப்பார்கள் முதல் அமைச்சருக்கு; அப்போது அவரே அதை நம்பியிருந்திருக்கமாட்டார். நடந்துவிட்ட பிறகு பேசுகிறார், நமக்கு முன்பே தெரியும்!! என்று.

தம்பி! அவர்கள் அவ்விதம் பேசுவதாலே நமக்கு நட்டமில்லை; சொல்லப்போனால் நமக்கு ஒருவிதத்தில் அந்தவிதமான பேச்சு நல்லதுகூட.

நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்; நாடே எதிர்பார்த்தது நாம் வெற்றி பெறுவோம் என்று, ஆனால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.