பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

பொதுத்தேர்தலை நடத்துவதைக் கண்டித்தோம்; தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாகிலும், மந்திரி பதவிகளை ராஜிநாமாச் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். காங்கிரஸ் அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இடைத் தேர்தலின்போது, நாம் அந்த யோசனையைக்கூட கூறமுடியாது; பொருளில்லை.

இடைத் தேர்தலிலே பெரும்பாலும் ஆளுங்கட்சி வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொள்ளும் வாய்ப்புப் பெறுகிறது. வருபவர் யார்? மந்திரி! கேட்பது என்ன? ஓட்டு! கொடுக்காவிட்டால்? கோபம்! கோபம் வந்தால்? என்னென்ன செய்வாரோ? நமக்கேன் அவர்களின் பொல்லாப்பு!!—இது பொதுவாக மக்களின் மனப்போக்கு. இதை மீறித்தான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிட வேண்டும்.

எதிர்கட்சிக்குத் தருகிற ‘ஓட்டு’ உடனடியான பலனை எதிர்பார்த்து அல்ல!

ஆளுங்கட்சினர் ‘ஓட்டு’ கேட்கும்போதோ, உடனடியாகப் பலன் தருவதாகக் சொல்லுகிறார்கள்; மக்கள் நம்பவும் செய்கிறார்கள்.

“பெண்கள் கல்லூரி வேண்டும், வேண்டும் என்று பல வருஷங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் எற்பாடாகவில்லை”

என்று தர்மபுரிப் பிரமுகர்கள், கழகத் தோழர்களிடம் கூறும்போது, கழகத் தோழர்கள் என்ன சொல்லுவார்கள்.

சட்டசபையில் இதைப்பற்றிக் கட்டாயம் பேசுகிறேன். கல்லூரி அமைக்காதிருக்கும் போக்கைக் கண்டிக்கிறேன். இந்தத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்துக் காட்டினால், காங்கிரஸ் மந்திரிகளுக்குப் பயம் ஏற்படும்; அப்போது கல்லூரிக்கு வழி பிறக்கும்.”

இதைத்தான் சொல்லுவார்கள்; முறை அமைச்சர் ராமய்யாவிடம் அதே தருமபுரிப் பிரமுகர்கள் அதே