185
எடுத்து, நமக்கு வரவேண்டிய ஓட்டுகளை விழுங்கிய கொண்டிருக்கிறது.
பண்புள்ள ஜனநாயக நாடுகளில், அமைச்சர்கள் தேர்தலின்போது—அதிலும் இடைத் தேர்தலின்போது—அதைச் செய்து தருகிறோம், இதை நிறைவேற்றிக் கொடுக்கிறோம் என்று வாக்களிக்கமாட்டார்கள். முறையல்ல என்பதால்.
தர்மபுரியில் நடந்தது என்ன?
சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும்போது, புதிய மாவட்டத்துக்கு எது தலைநகர், கிருஷ்ணகிரியா? தருமபுரியா? என்கிற பிரச்சினை அங்கு ஓட்டுக் கேட்க வந்த அமைச்சர்கள்,
- தருமபுரியைத் தலைநகர் ஆக்கித் தருகிறோம்.
என்று, அங்கேயே அறிவித்திருக்கிறார்கள். தருமபுரியில் பிரமுகர்களும், வணிகர்களும், எப்படி அதிலே மயங்காதிருக்க முடியும்!
முழுக்கணக்கு எனக்குக் கிடைக்கவில்லை என்றாலும், தருமபுரியைத் தலைநகர் ஆக்குகிறோம் என்று தேர்தல் நேரத்தில் காங்கிரசார் வாக்களித்த காரணத்தால், தருமபுரி வட்ட ஓட்டுகள் நமக்குக் கிடைத்திருக்க வேண்டியவை, காங்கிரசுக்கு விழுந்துள்ளன என்பது தெரிகிறது.
தம்பி! தருமபுரி தொகுதி மூன்று பிரிவுகள் கொண்டது; ஒன்று காரிமங்கலம் வட்டம்; இரண்டாவது தருமபுரி வட்டம்; மூன்றாவது நல்லம்பள்ளி வட்டம்.
கடந்த பொதுத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக நின்றவர் நல்லம்பள்ளி வட்டம் பாளையம் புதூர் கந்தசாமி கவுண்டர். கழக வேட்பாளர், தருமபுரி வட்டம். வெற்றிபெற்ற சுயேச்சையாளர் வீரப்ப செட்டியார் காரிமங்கலம் வட்டம்.
ஆகவே காரிமங்கலம் வட்டத்து ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை, வீரப்பசெட்டியாருக்கு, நல்லம்பள்ளி வட்டத்து ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை காங்கிரஸ் வேட்பாளர் பாளையம் புதூராருக்கு, கழக வேட்பாளரான சுப்பிரமணியம் அவர்களுக்கு, தருமபுரி வட்ட ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை விழுந்தன.
கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்ததைவிட இம்முறை காரிமங்கலம் வட்டத்திலும், நல்லம்பள்ளி வட்டத்-