பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

திலும் (நான் அறிந்தவரையில்) கழகத்துக்குக் கிடைத்திருக்கிறது; ஆனால், தருமபுரி வட்டத்துக்கள் ஓட்டுகள் கழகத்துக்குக் குறைந்துவிட்டன.

காரணம் என்ன இருக்க முடியும்? தலைநகர்!!

இந்த ஆராய்ச்சி செய்துகாட்டி தோல்வியை மறைத்திட ஒரு திரை நெய்துகொண்டிருக்கிறேன் என்று எவரும் எண்ணிக்கொள்ளவேண்டாம். இந்த விவரம் கூறுவதற்குக் காரணம், தேர்தலின் போது, நாம் துளியும் எதிர்பாராத, புதிய நிலைமைகள் வடிவமெடுத்து, எதிர்பாராத, விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும் என்பதை விளக்குவதற்காகவே.

ரஷியாவிலே, நெப்போலியன் படுதோல்வி அடைந்த தற்கான பல காரணங்களிலே ஒன்று என்று இன்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் நெப்போலியன் ரஷியா மீது படை எடுத்துச் சென்ற சமயத்தில், வழக்கமாக ஆரம்பமாகிற பனிக்காலம் பத்துநாள் முன்னதாகவும், வழக்கத்தைவிடக் கடுமையாகவும் ஆரம்பித்தது ஆபத்தாக முடிந்தது என்கிறார்கள்.

களத்திலே ஏற்பட்டுவிடும் தோல்விகள், படை பலத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் போதாது, முறைகளையும் செம்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பாடம் தருவன. அந்த முறையில், தருமபுரித் தோல்வியை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

மக்களின் இதயம் வென்றிட நாம் எடுத்துக் கொண்ட முயற்சி நாம் பெருமிதம் கொள்ளத்தக்க வெற்றியைக் கொடுக்கிறது. நமக்குக் கிடைத்துள்ள இந்த வலிவினைச் சிதைத்திட, ஆளுங்கட்சியான காங்கிரஸ் என்னென்ன நிலைமைகளை உருவாக்கும், என்னென்ன முறைகளை மேற்கொள்ளும் என்பன பற்றி விழிப்புடனிருந்து கண்டறிந்து அவைகளையும் முறியடிக்கத்தக்க விதமாக நமது முறைகளைச் செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காகவே இத்தனை கூறினேன்.


9-5-1965

அண்ணன்,
அண்ணாதுரை