141
மிருகங்கள் போலவே, புதர்களில் பதுங்கிக் கிடந்தவன். குகைகளைக் கண்டான்; அதிலே இருந்துவந்த மிருகங்களை விரட்டிவிட்டோ கொன்றுவிட்டோ, குகைகளைத் தனதாக்கிக் கொண்டான். குகைகளைக் கண்டறிந்தது மட்டுமல்ல, சில காலத்துக்குப் பிறகு, மலைகளைக் குடைந்து குகைகளை உண்டாக்கிக் கொண்டான். சுற்றுச் சார்பினை மாற்றி அமைத்திட அமைத்திட, அதற்கு ஏற்றவிதமாக இயல்பு மாறிக்கொண்டு வரலாயிற்று.
சுற்றுச் சார்பினைத் தனக்குச் சாதகமான முறையில் மாற்றி அமைத்துக் கொள்ளும் திறமை பெற்றிருக்கும் காரணத்தினாலேயே, மனிதன் எந்த இடத்திலும் இருந்திடும் வகை கண்டறிந்து வாழ்ந்திட முடிகிறது.
வெப்பம் தீயெனத் தாக்கும் சகாரா பாலைவனத்திலும் மனிதன் இருக்கிறான், பனி மலை மிகுந்த அயிஸ்லாந்திலும் இருக்கிறான்; கடலோரமும் அவனைக் காணலாம். மலைமுகட்டிலும் அவன் இருக்கிறான்; ஆற்றோரமும் இருக்கிறான்; அடவியிலும் இருக்கிறான்; பெருமழை பொழிந்தபடி உள்ள இடத்திலும் இருக்கிறான்; வறட்சி மிகுந்த இடத்திலும் இருக்கிறான்.
மிருகங்களின் நிலை அவ்விதமில்லை. பனிப் பிரதேசத்து மிருகங்களை பாலைவனத்தில் கொண்டு சேர்த்தால் செத்துப் போகின்றன; நீர்வாழ்வனவற்றை நிலத்தில் கிடத்தினால் உயிர் போய்விடுகிறது. சில சுற்றுச் சார்பிலே வாழ்ந்திடும் வகையினுள்ளவைகள், மாறான சுற்றுச் சார்பிலே கொண்டு சேர்க்கப்பட்டாலோ, தாமாகச் செல்ல நேரிட்டாலோ மடிந்து விடுகின்றன.
மிருகக் காட்சிச் சாலைகளில் இதனை உணர்ந்தே, எந்தெந்த மிருகத்துக்கு என்னென்ன விதமான சுற்றுச் சார்பு தேவையோ அதனை அமைத்துத் தருகிறார்கள்.
மனிதன், எவ்விதமான சுற்றுச் சார்புள்ள இடத்திலும் இருக்கிறான்; காரணம், அதனைத் தனக்கு ஏற்றதாக்கிக்கொள்ளும் முறைகளைக் கண்டறிந்துகொள்ள முடிவதால்.
கடுங்குளிர் மிக்க இடமானால் கம்பளிச் சட்டை அணிந்து கொள்வதன் மூலம், கொடுமை நேரிட்டு விடாத-