பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

குடும்பத் தலைவி முன்னே செல்ல, மற்றவர்கள் பின்னால் செல்கிறார்கள்.

ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள கரடிகளைத் தாக்கிக் கொல்கிறார்கள்—உணவுக்காக.

குகைக்கு வருகிறார்கள்—வழியிலே ஓநாய்கள் சூழ்ந்து கொள்கின்றன. போர்!

ஓநாய் கொல்லப்படுகிறது, அதன் பச்சை இரத்தத்தை இவர்கள் குடிக்கிறார்கள்-சதையைப் பிய்த்துத் தின்கிறார்கள்.

இவர்களிலே சிலரை ஓநாய்கள் கொன்று, சதையைப் பிய்த்துத் தின்கின்றன.

இது ஒவ்வொரு நாளும்—கொல்வது கொல்லப்படுவது—குருதி கொட்டுவது குருதி குடிப்பது—நாலு கால் மிருகங்களுக்கும் இரண்டுகால் மிருகங்களுக்கும் ஓயாத போர்! இது வாழ்க்கை முறையாக இருந்திருக்கிறது என்பதை எடுத்து காட்டுகிறார் ஆராய்ச்சியாளர்.

இவ்விதமான முறையிலா மனிதகுலம் இருந்து வந்தது என்று எண்ணும்போதும், இவ்விதமாக இருந்து வந்த மனிதகுலத்தில், வழிவழி வந்தவர்களே நாம் என்பதை எண்ணும்போதும், எல்லாவகையாலும் மனிதன் உயர்ந்தவன, சிறந்தவன் என்ற எண்ணமே ஒரு விதமான கேலிக்கூத்தாகத் தென்படும்.

மாக்களுக்கும் நமக்கும் மாறுபாடு தெரியமுடியாத நிலையிலே இருந்து, வெகுதூரம் முன்னேறிவிட்டோம் என்ற எண்ணம் ஒரு விதமான மன நிம்மதியைக் கூடத்தரும் என்பதில் ஐயமில்லை.

கூர்ந்து பார்த்தால், முறையிலே வியக்கத்கக்க மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அடிப்படை அலுவல்கள், இயல்புகள், உணர்வுகள், வெகுவாக மாறிவிடவில்லை என்பது புலனாகும்; புலனாகும்போது, மாக்களைவிட நாம் மிக அதிகமாக முன்னேறிவிட்டோம் என்று கூறிக்கொள்வதற்கில்லையே என்ற எண்ணம் நம்மைப் பிடித்து வாட்டி வதைத்திடும்.

கல்லைத் தீட்டிக் கருவியாக்கி, காட்டுமிருகங்களை வேட்டையாடிக் கொன்றுதின்று உடற்பசியைப் போக்கிக்