பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

பெற எம்முறையையும் மேற்கொள்ளலாம் என்ற துணிவும், காட்டிலும்சரி நாட்டிலும்சரி, கொடிய செயல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடத்தக்க, ஒருவரை ஒருவர் வஞ்சித்தும் அழித்தும் கொள்ளத் தேவையற்ற முறைபெற, விஞ்ஞானம் வழிகாட்டுகிறது. ஆனால், இதற்கு அந்த விஞ்ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்வதைக் காட்டிலும், அழிவுக் கருவிகளைத் தயாரிப்பதற்காகவே விஞ்ஞானத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பல விஞ்ஞான விற்பன்னர்கள் இது குறித்துத் தமது கவலையையும் தெரிவித்துள்ளனர்.

பொருளை மிகுதியாக்கிக்கொள்ளவும் வளத்தைப் பெருக்கிக்கொள்ளவும், விஞ்ஞானம் வழிகாட்டத் தயாராக இருக்கிறது; ஆனால், அதனிடமிருந்து வெடிகுண்டுகளையும் அணுகுண்டுகளையுமே அரசுகள் கேட்டுப்பெற்று இறுமாந்து கிடக்கின்றன.

பஞ்சம் பசி போக்கிடும் வழிகாட்டப் பயன்பட வேண்டிய விஞ்ஞானம், இன்று பகை மூட்டிட, அழிவை ஏவிடப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதனுடைய வாழ்க்கை முறையையே செம்மைப் படுத்தவும், மேம்பாட்டையச் செய்யவும் பயன்பட வேண்டிய விஞ்ஞானத்தை, மனிதகுலத்தின் நாசத்துக்குக் கருவிகளைச் செய்திடும் காரியத்துக்குப் பயன்படுத்துவது கொடுமையினுங் கொடுமை. எனினும் இந்தக் கொடுமை நடந்தபடி இருந்திடக் காண்கின்றோம்.

இன்றுள்ள மனிதகுலம், தனக்குக் கிடைத்துள்ள விஞ்ஞானத்தை இத்தகைய கொடுமைக்குப் பயன்படுத்தினதுபோல, மாக்கள் நிலையிலிருந்து விடுபடாதிருந்த மக்கள், தமக்குக் கிடைத்த கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களில்லை. அவர்களுக்கு விஞ்ஞானம் நகர் அமைப்பு, பாதை அமைப்பு, பாசன வசதி, பயிரிடும் முறை, கல்விக்கூடம், மருத்துவக்கூடம் என்பவைகளைத் தரவில்லை — இன்றைய மனித குலத்துக்கு விஞ்ஞானம் தந்துள்ள வசதிசள் மிகப்பல; எனினும், கிளியைக் கொன்று காக்கைக்கு விருந்திடுவதுபோல, விஞ்ஞான