இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காஞ்சிக் கடிதம்: 19
சொக்கப்பனிடம் பட்ட கடன்
- அமெரிக்கக் கடனும் ரஷ்யக் கடனும்
- புதுக் கடன் கொண்டு பழங்கடன் அடைப்பு
- கடன் தீர்க்கும் அளவுக்குத் தொழில் அமைப்பு ஏற்படாமை
- நேரிடைப் பதிலும் திட்டவட்ட விளக்கமும் தேவை
- காமராசரால் கழுகைக் கிளியாக்கிவிட முடியுமா?
தம்பி,
சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சோணாசலத்திடம் புதிதாகக் கடன் வாங்குபவர் உண்டு; சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மேலும் கடன் வாங்குபவர் உண்டா? கண்டதுண்டா?
இல்லை என்கிறீர்கள். அப்படி ஒருவர் எப்படி இருக்க முடியும் என்று கேட்கிறீர்கள். மலைபோல இருக்கிறார் தம்பி! மலைபோல! கண்டதில்லை என்கிறாய். நான் என்னத்தைச் சொல்ல!!
சொக்கப்பனிடம் பட்ட கடனை ஏன் திருப்பித்தர முடியவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்; மற்றவை பிறகு எளிதாகப் புரியும்.