பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

வருவாய் கிடைக்கும் விதமாகக் கடன் தொகையைச் செலவழிக்காததால், 1965-66ல் செலுத்த வேண்டியுள்ளதவணைத் தொகையான 274-கோடி ரூபாய்க்கு வழி தெரியவில்லை மாநில அரசுகளுக்கு. என்னதான் செய்கிறார்கள்? சொக்கப்பனிடம் பட்ட கடனைத் திருப்பித்தரச் சொக்கப்பனிடமே மீண்டும் கடன் வாங்குகிறார்கள்.

274-கோடி என்றேனே, இது அசல் தொகையில் ஒரு பகுதி.

இத்துடன் வட்டியும் கட்டவேண்டுமே! அதற்காக 135-கோடி ரூபாய் தேவை. மொத்தத்தேவை இந்த ஆண்டுக்கு 409-கோடி ரூபாய்.

இதற்காகப் பேரரசிடம் மாநில அரசுகள் மீண்டும் 703-கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். அந்தக் கடன் தொகையிலிருந்து, பழைய கடனுக்காக 409-கோடி ரூபாயைக் கட்டப் போகிறார்கள்!

இதுபோலவே பேரரசு கதர்த்தொழில் அமைப்புக்குக் கடன் கொடுத்திருக்கிறார்கள்; அந்த அமைப்பும் 34-கோடி ரூபாய் தரவேண்டும்! அதற்காசு, பேரரசு புதிய கடன் கொடுக்கிறார்கள் அந்த அமைப்புக்கு! அந்தப் புதிய கடனைக்கொண்டு பழைய கடனை அடைக்கப் போகிறது கதர் அமைப்பு!

இதற்கெல்லாம் பேரரசுக்குத் தொகை வேண்டுமே அதற்கு வழி? பாடுபட்டுக் குவித்துள்ள வருவாயிலிருந்து எடுத்து வழங்கப் போகிறதா? இல்லை! இல்லை! அப்படி இருந்திருந்தால், பேரரசு, மாநில அரசுகளைத் தட்டிக் கேட்காதா; பட்ட கடனைக்கூடத் திருப்பித் தரமுடியாமல் புதுக் கடன் கேட்டுக் கொண்டிருக்கலாமா? இது உருப்பட வழியாகுமா? என்றெல்லாம். பேரரசு பட்டுள்ள கடன் தொகையைக் கொண்டு தக்கவருவாய் தேடிக் கொள்ளாததால் 1965—66 ஆண்டிலே மட்டும், இந்தியாவுக்கு உதவி செய்யும் கழகத்திடம் புதிதாகக் கடன் கேட்டிருக்கிறது, 560 கோடி ரூபாய்!!

மேலேயும் சரி கீழ்மட்டத்திலும் சரி, ஒரே முறை; சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே புதிய கடன் பெறுகிறமுறை.

இது நல்லதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்! இது கேவலம் என்கிறார் விஜயலட்சுமி பண்டிட்! இதைப்