162
நாயக உணர்வு வளர்ந்துள்ள நாடுகளில் சர்க்காரை நடத்தும் கட்சியிடம் இவ்விதமான ‘கணக்கு’களை மக்கள் கேட்கிறார்கள்; கேட்பதால் எதிர்க்கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், மக்களுக்குப் பயந்து, எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து, நீதி நியாயததுக்குப் பயந்து நடந்துகொள்ளவேண்டி இருக்கிறது. இங்கோ, சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மேலும் கடன் வாங்கி, வாங்கிய கடனை வகையான முறையில் செலவிட்டு வருவாயைப் பெருக்கிக் கொள்ளாமல் நடந்துகொள்ளும் ஒரு அரசு அட்டகாசம் செய்கிறது; அதனை நீக்கிட, மாற்றி அமைக்க, மக்கள் துணிந்து எழ இயலவில்லை.
கொடுப்பவர் கிடைக்கும்போது கடன் வாங்குவது எளிதான காரியம், அதிலே பெருமை இல்லை; புதிய சுமை ஏறுகிறது என்றுதான் பொருள்.
கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்திவிட முடியும்; ஏனென்றால், அந்தத் தொகையைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள தொழிலில், ஆதாயம் எதிர்பார்த்த அளவு கிடைத்து வருகிறது, ஆகவே, கவலை வேண்டாம் என்று கூறிடும் அரசுதான், மக்களின் நன்மதிப்பைப் பெறக்கூடிய அரசு.
இன்று வரையில், இந்தியப் பேரரசு, பெரும் பெரும் தொகையினைக் கொட்டிக் கட்டி நடத்தி வரும் தொழில் அமைப்புகள் ஆதாயம் தந்துவருகின்றனவா என்ற சாதாரணக் கேள்விக்கு, நேர்மையுடனும் நேரிடையாகவும் பதில் கூறட்டுமே பார்க்கலாம், அரசாளும் பெரிய தலைவர்கள்!
கடன் வாங்காமல் இருக்க முடியுமா என்று கேட்பதும், அமெரிக்காவே ஒரு காலத்தில் கடன் வாங்கி இருக்கிறது தெரியுமா? ரஷியாவே கடன் வாங்கி இருக்கிறது தெரியுமா? என்று கேட்பதும், புதிதாகத் தொழில் துவக்கிட, கடன் வாங்கித்தானே ஆகவேண்டும்? என்று கேட்பதும் எனக்குத் தெரியும்.
அரைத்த மாவையே அரைத்துக் காட்டாமல் நேர்மையாகவும் நேரிடையாகவும் அந்தப் பெரிய தலைவர்களைப் பதில் கூறச்சொல்லிக் கேட்டுப் பார், தம்பி! வாங்கிய கடனைக்கொண்டு பேரரசு துவக்கி நடத்திவரும்