163
தொழில் அமைப்புகளிலே, ஆதாயம் கிடைக்கிறதா? இல்லை என்றால், ஏன்? ஆதாயம் கிடைக்காதபோது, கடனைத் திருப்பிக்கட்ட வழி ஏற்படுமா? கடனைக்கூடத் திருப்பிக் கட்டுவதற்கான வருவாயைப் பெறமுடியாத நிலையில் தொழில்களை நடத்தி வருவது, திறமைக் குறைவைத்தானே காட்டுகிறது?
இந்தத் திறமைக் குறைவு உள்ள ஒரு ஆட்சியை நடத்திவரும் கட்சியை மக்கள் எதற்காக மறுபடியும் மறுபடியும் ஆதரிக்க வேண்டும்? இந்தத் திறமைக் குறைவு நெளியும் நிலையில் உள்ள கட்சி, நாட்டிலே வேறு எந்தக் கட்சிக்கும் நாடாளும் தகுதியும் திறமையும் கிடையாது என்று பேசுவது முறையாகுமா?
தம்பி, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் தான் கிடைக்கிறது காமராஜர்களிடமிருந்து; எதிர்க்கட்சிக்காரன் பேச்சைக் கேட்காதே!!—இதுதான் பதில் பேச்சு!
சர்க்காரே நியமித்துள்ள தணிக்கைக் குழு சர்க்கார் துறையிலே உள்ள தொழில் அமைப்புகளிலே காணக்கிடக்கும், ஊழல் ஊதாரித்தனம், மந்தம், முறைகேடு, நஷ்டம் ஆகியவை பற்றிப் புட்டுப் புட்டுக் காட்டுகிறது.
- எடுத்துக் காட்டுக்காக ஒரு கணக்கு:
- இந்தியப் பேரரசு 870 கோடி ரூபாய்களை மூலதனமாகப் போட்டு அமைத்து நடத்திவரும் தொழில் அமைப்புகளின் மூலம் கிடைத்துள்ள வருவாய், சர்க்கார் கணக்கின்படி 3 கோடியே 22 இலட்ச ரூபாய்.
- போடப்பட்டுள்ள மூலதனத்துக்கு வட்டி மட்டும் எவ்வளவு தெரியுமா தம்பி! 24 கோடி ரூபாய்!
- இந்த 3 கோடியே 22 இலட்ச ரூபாய் இலாபம் என்பது, வட்டி கொடுத்தான பிறகு அல்ல!! இந்த 3 கோடியே 22 இலட்ச ரூபாய் இலாபமும் எப்படிக் கிடைத்தது? தொழிற்சாலையிலே பொருளை உற்பத்தி செய்ததன் மூலம் கிடைத்தது அல்ல. பண்டங்களை வாங்கி விற்றதிலே கிடைத்த இலாபம்!
இதைக் கண்டு பொறுப்புள்ள கட்சி வெட்கப்பட்டிருக்க வேண்டும்; பொறுப்புள்ள மக்கள் இந்த