164
நிலைமைக்குக் காரணமாக உள்ள கட்சியை வீழ்த்தியிருக்க வேண்டும்.
பொதுப் பணத்தையும், கடனாகப் பெற்ற பணத்தையும்—ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை, வகையற்ற விதமாகச் செலவிட்டு, ஆதாயம் தராதவிதமாகத் தொழில் அமைப்புகள் நடத்தி, மக்களுக்கு—எதிர்காலச் சந்ததிக்கும் சேர்த்து—துரோகம் செய்திடும் ஒரு கட்சியை வேறு எந்த நாட்டிலும், தாங்கிக்கொள்ள மாட்டார்கள். இங்கு அந்தக் கட்சியை விட்டால் வேறு வக்கு வழி இல்லை என்று கூறிடத்தக்க அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.
அத்தகைய மோசமான நிலைமையை மாற்றி, காரிருளைக் கலைத்திடும் அறிவு ஒளியைத் தந்திடும் எழு ஞாயிறாகத் திகழ்கிறது நமது கழகம்.
ஆபத்து நிரம்பிய ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசினர், சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே கடன் வாங்கும் போக்கிலே நடந்துகொள்கிறீர்களே, இது முறையா சரியா என்று கேட்கும்போது, கடனைத் திருப்பிக் கட்டக்கூடிய வருவாய் பெருகி வருகிறது என்ற கணக்குக் காட்டாமல், வேறு ஏதேதோ தேவையற்ற பிரச்சினைகளைப் பேசி வருகின்றனர்.
தம்பி! யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது காமராஜருக்கு; நீங்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகி விட்டிருக்கிறீர்கள். ஆகவே, இனிச் சற்று அதிகமாக, வெளிநாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள் என்று. இம்முறை நடத்தினாரே—என்ன பயணம்?—மின்னல் வேகச் சூறாவளிப் பயணம்!! அதிலே வெளிநாட்டுப் பிரச்சினை பற்றியும் பேசியிருக்கிறார்.
மின்னல், நிரந்தர ஒளியைத் தருவதில்லை; சூறாவளி நல்லதைக் கொடுப்பதில்லை; இதை உணர்ந்துதானோ என்னவோ சில இதழ்கள், காமராஜரின் சுற்றுப் பயணத்தை, மின்னல் வேகச் சூறாவளிப் பயணம் என்று எழுதியிருக்கின்றன. அந்தப் பயணத்தின்போது தான் காமராஜர், ரஷியாவுடன் சேருவதா அமெரிக்காவுடன் சேருவதா என்ற பிரச்சினையைப் பற்றிக் கூடப் பேசியிருக்கிறார்.