பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

மற்ற யாருக்கு எந்தவிதமான கருத்து இருந்து வந்த போதிலும், தம்பி! நமது கழகம், ரஷியாவுடன் சேரவேண்டாம். அமெரிக்காவுடன் கூட்டுச் சேர வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தியது இல்லை; இனியும் சொல்வதாக இல்லை.

கழகம் கூறுவதெல்லாம், எந்த இடத்திலிருந்து பெறுகிற கடனாக இருந்தாலும்—கடன் கடன்தான் என்பதும், அந்தக் கடனை, வருவாய் தரத்தக்க விதமாகச் செலவிட்டுத் தொழில் அமைப்புகளைக் காணவேண்டும் என்பதும்,

இதிலே இன்றுவரை, இந்தியப் பேரரசு, வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க தோல்விகளைத்தான் பெற்றளித்து இருக்கிறது என்பதும்,

இதன் காரணமாக இந்தத் தலைமுறை மட்டும்மல்லாமல், வருகின்ற தலைமுறைக்கும், பெருஞ்சுமை ஏறிவிட்டிருக்கிறது என்பதும்,

இத்தனை கேட்டினுக்கும் காரணமாக உள்ள காங்கிரஸ் கட்சியிடம் மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்புவிப்பது தவறு என்பதும் ஆகிய இவைகளே.

அமெரிக்கா, நமக்குச் சரியானபடி மதிப்பளித்துப் பரிவுகாட்டி, நியாயம்காட்டி நடந்துகொள்ளவில்லை; ரஷியா அவ்விதம் இல்லை; நமக்காகப் பரிந்துபேசி வருகிறது. ஆகவேதான் லால்பகதூர் ரஷியா போகிறார் என்கிறார் காமராஜர்.

இவ்விதம் லால்பகதூர் பேசமாட்டார்.

இனி என்றென்றும் லால்பகதூர், அமெரிக்கா போகவே கூடாது என்று முடிவு எடுத்துவிடவில்லை.

இனி என்றென்றும் எந்தவிதமான உதவியும் அமெரிக்காவிடமிருந்து நமக்குத் தேவையே இல்லை என்று லால்பகதூர் அறிவித்துவிடவில்லை.

வெட்கப்படாமல் உண்மையை ஒப்புக்கொள்வதானால், லால்பகதூர் அமெரிக்கா போகாமல் ரஷியா சென்றதற்குக் காரணம், இப்போது இங்கே வரவேண்-