166
டாம் என்று அமெரிக்கத் தலைவர் ஜான்சன் சொன்னது தான்.
காமராஜரின் ‘கண்டுபிடிப்பு’ வேறு!!
அவருடைய அந்தப் பேச்சு ஆங்கில ஏடுகளில் எடுப்பான முறையிலே வெளியிடப்பட்டாலே போதும், அவருக்கும் சங்கடம் ஏற்படும், இந்தியப் பேரரசுக்கும் சங்கடம் விளையக்கூடும்.
நல்ல வேளையாக இங்கே பேசினார், தமிழில்! இப்படியா பேசினீர்கள் என்று யாரேனும், டில்லி வட்டாரத்திலே கேட்டால், உடனே, நான் பேசியது அவ்விதம் அல்ல பத்திரிகைக்காரர்கள் திருத்திப் போட்டுவிட்டார்கள் என்று கூறிடத்தெரியும் காமராஜருக்கு. முன்பு ஒரே அடியாக அடித்தாரல்லவா, இந்தியிலே அறிக்கை வந்தால், கிழித்துப்போடுவோம் என்று நான் சொல்லவே இல்லை என்று, வடக்கே உள்ளவர்கள் கேட்டபோது! அதுபோல!!
இப்போது உள்ள பிரச்சினை, இந்தியா ரஷியாவிடம் நேசமாக இருப்பதா, அமெரிக்காவுடன் நட்பாக இருப்பதா என்பது அல்ல,
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான்சன், இப்போது இங்கே வரவேண்டாம் என்று கூறியது பொறுத்துக் கொள்ளக்கூடியதுமல்ல, மறந்துவிடத்தக்கதுமல்ல; அந்தப் பேச்சு ஜான்சனுடைய தரத்தையே வெகுவாகக் குறைத்து விட்டிருக்கிறது என்பதையும் நான் மறுப்பவனல்ல.
ஆனால் தம்பி! காமராஜர் பேசியதில் இருந்து, இனி அமெரிக்காவின் உதவி கேட்டிட இந்தியப் பேரரசு விரும்பாது என்று மட்டும் யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம், அவருக்கேகூட அந்த எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது. சூறாவளிப் பயணத்தின் காரணமாக, அவர் நிலைமையை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார்.
அவர் அத்தனை வீராவேசமாக இங்கே பேசிக் கொண்டிருந்த நாளில், அமெரிக்காவில், உதவி கேட்டுக் கொண்டு, உருக்கமாக ஒரு மேத்தா பேசிக்கொண்டிருந்தார்.
ஆமாம். தம்பி! அசோக்மேத்தா, இந்தியாவுக்கு உதவி, தாராளமாகவும் ஏராளமாகவும் செய்யும்படி