169
நாக நாட்டுப் பிரச்சினை, பாஞ்சாலச் சிக்கல், மத்தியப் பிரதேசத்து மாச்சரியம், உத்திரப்பிரதேசத்து உபத்திரவம், ஒரிசா ஊழல், மைசூர் மனத்தாங்கல், பாகிஸ்தான் பகை, சீனாவின் தாக்குதல் எனும் இன்னோரன்ன எல்லாப் பிரச்சினைகளுக்கும் பத்தே நாள்; நமது கழகம் ஏற்படுத்தி வைத்துள்ள எழுச்சியை, மக்களின் விழிப்புணர்ச்சியை அழித்திடும் முயற்சிக்கு இருபது நாள்!
அவ்வளவு வேலை இருப்பதாக உணருகிறாரே காமராஜர், ஒப்புக்கொள்கிறாரே மறைமுகமாக, அது போதும், நமக்கு நமது பணியின் தரத்திலும் அளவிலும் பெருமை இருக்கிறது, பலன் இருக்கிறது என்பதை உணர்த்த.
அகில இந்தியாவுக்கும் சேர்த்து அவர் தலைவர்!! ஆமாம், தம்பி! ஆனால் அவர், மாதத்தில் இருபது நாள் இங்கு இருந்தாக வேண்டும் என்று நிலைமை!!
தருமபுரியில் வெற்றி பெற்றதனால், வேறு சில தலைவர்கள், கழகம் செல்வாக்கு இழந்துவிட்டது. காங்கிரசுக்குச் செல்வாக்கு அதிகமாகி விட்டது என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்; காமராஜருக்குத் தெரிகிறது, தருமபுரி வெற்றியைக் கொண்டு கணக்குப் போட்டு ஏமாறக்கூடாது என்று; ஆகவே தான், மாதத்தில் இருபது நாள் இங்கு!!
மாதத்தில் இருபது நாள் காமராஜர், மின்னல் வேகச் சூறாவளிச் சுற்றுப் பயணம் நடத்தி, மக்களிடம் கழகம் ஏற்படுத்தி வைத்துள்ள எழுச்சியை மாய்த்திடும் முயற்சியில் ஈடுபட வேண்டி ஏற்பட்டுவிட்டிருக்கிறது. இது என்னைப் பொருத்தவரையில், தம்பி! ஒரு இனிப்பளிக்கும் நிகழ்ச்சியாகவே தோன்றுகிறது.
காமராஜருக்கு நிரம்ப வேலை தர, கழகம் களிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஒன்று. கழகம் எழுப்பிடும் பிரச்சினைகளை நேர்மையாகவும் நேரிடையாகவும் சந்தித்து, தக்க விளக்கம் தரவேண்டும் காமராஜர். சுற்றி வளைத்துப் பேசுவது, சூடம் கொளுத்திப் பூஜை செய்வோர்களின் புன்னகையைப் பெற்றிடப் போதும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது, எடுபிடிகளின் எக்கா-