பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

ளத்துக்குப் போதும்! அவனே! இவனே! என்று பேசுவது, பண்பு நிரம்பப் பெறவேண்டும் என்பதைமட்டுமே விளக்கிக் காட்டிடும். மக்களின் மனத்திலே ஏற்பட்டுள்ள அச்சம், அய்யப்பாடு, அருவருப்பு, அலுப்பு இவைகளைப் போக்க நேர்மை வேண்டும், நேரிடையான பதில் வேண்டும், திட்டவட்டமான விளக்கம் வேண்டும்.

இதனைக் கருத்திலேகொண்டு, காமராஜர், இருபது நாட்கள் அல்ல, இருபது நிமிடம் பேசினாலும், விவரமறிந்தோர் பாராட்டுவர். குயில் நாளெல்லாம் பாடித்தானா பாராட்டுப் பெறுகிறது; இல்லையல்லவா!!

மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள், ஏன் எங்கள் இன்னல் போகவில்லை,

எங்கள் இன்னலைப் போக்கத் தீட்டிய திட்டங்கள் ஏன் எங்களை வாழவைக்கவில்லை,

எங்களை வாழவைக்க என்று சொல்லிப் போட்ட திட்டத்தின் பலன் எப்படிச் சீமான்களிடம் சிக்கிக்கொண்டது,

அப்படிச் சீமான்களிடம் அந்தப் பலன் சிக்கிக்கொண்டதை ஏன் நீங்கள் தடுக்கவில்லை,

தடுக்காதது மட்டுமல்ல அவர்களுடன் கூடிக் குலாவித் குழலூதி வருகிறீர்களே, அது ஏன்?

அது மட்டுமல்லாமல், அந்த அக்கிரமக்காரர்களிடமிருந்து, கட்சிக்காகக் கோடி கோடியாகப் பறித்துக் கொள்கிறீர்களே, அது முறையா?

அப்படிப் பறித்துக்கொண்டு பிழைத்து வரும் நீங்கள், சோஷியலிசம் பேசுகிறீர்களே, அது உண்மையாக இருக்க முடியுமா?

ஊர்க்குடி கெடுப்பவனை உறவினனாக்கிக்கொண்டு ஊர் வாழ வகுக்கப்பட்ட சோஷியலிசத்தை நடத்திக் காட்ட முடியுமா? இவை போன்றவைகளை.

அவனுக்கு என்ன தெரியும்! இவனுக்கு என்ன முடியும்! எல்லாம் எனக்குத் தெரியும்! எதுவும் என்னால் தான் முடியும்!!—என்ற இந்த முறையில், இருபது நாட்களா, முப்பது நாட்கள் பேசினாலும், மக்களிடம்