இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
174
மாய்ந்திடும் விட்டில் பூச்சிகள் போன்றாரை விட்டுவிட்டு உழைத்துப் பிழைப்பவர்கள், ஊருக்கு உழைப்பவர்கள், உண்மையை உணரத் துடிப்பவர்கள், நீதிக்காகப் பரிந்து பேசுபவர்கள், நெருப்பாற்றைக் கடந்திடும் அஞ்சா நெஞ்சு கொண்டவர்கள் ஆகியோரிடம் இவைகளைக் கூறிடு. பெரிய பெரிய சர்வாதிகாரங்களைக்கூட, இத்தகையவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அணிவகுப்புகள் வீழ்த்தின என்று படித்திருப்பதால், தம்பி! எனக்கு ஒரு நம்பிக்கை; அந்த நம்பிக்கையுடன் இவைபற்றிக் கூறினேன், வேறு எவரிடம் கூறுவேன்?
23-5-1965
அண்ணன்,
அண்ணாதுரை