177
ஆனால், வாய் மட்டுந்தான் மூடிக்கிடக்கிறது; மனம்? தூங்குவதில்லை! உண்மையை உணராமலிருப்பதில்லை.
திட்டமிட்டு, பயனற்றவைகளைக் கலந்தளிக்கும் முறை வணிகத்துறையிலே மிகுந்துவிட்டிருக்கிறது என்று அறிந்தோரும் அனுபவித்து அல்லற்பட்டோரும் கூறுகின்றனர்.
ஒருவர் கூறினார் என்னிடம் ஒரு ஊரில், அரிசியுடன் கலப்பதற்காக வெள்ளைநிறக் கூழாங்கற்களை அரிசி போன்ற வடிவிலேயே உடைத்துத் தந்திட ஒரு சிறு யந்திரமே வைத்திருக்கிறார்களாம்! அரிசி சோறாக ஆன பிறகே, இந்தக் கல்லரிசியைக் கண்டுபிடிக்க முடியுமாம்! வேகாதல்லவா, கல்லாலான அரிசி! கண் மட்டும் போதவில்லையல்லவா, அரிசியுடன் கலந்துள்ள-கலந்துள்ளதா!! கலக்கப்பட்டுள்ள!!-கல் அரிசியைக் கண்டுபிடிக்க!
சீவல் பாக்குடன் ஏதோ ஓர்விதமான கொட்டையை (காட்டுப்பயிர்) சீவிக் கலந்துவிடுவதாகவும், தழையை வேகவைத்துக் கருநிறமாக்கிப் பொடி செய்து தேயிலைத்தூளுடன் கலந்து விடுவதாகவும், ஏலத்துடன் கருநிறமான மெழுகுத் துண்டுகளைக் கலந்து விடுவதாகவும் கூறுகிறார்கள்.
இவை, குறுக்கு வழியில், தவறான வழியில் ஆதாயம் தேட நடத்தப்பட்டு வரும் அக்கிரமங்கள், சட்டம் இருக்கிறது, ஆனால், அதனால் மட்டும் எவ்வளவு என்று வேலைசெய்ய முடியும்! அலுத்துப்போய் விடுகிறது! தூங்கிவிடுகிறது! மயக்கமடையச் செய்தும் விடுகிறார்கள்! இன்று நேற்றா! நெடுங்காலமாகவே.
கிரேக்க நாட்டுக் கவிஞர் பெருமகன், ஹோமர் கூறினார்.
- ஓடிவிடுகிறது ஒய்யார அநியாயம்!
- மாந்தரை அலைக்கழித்து மானாய்ப் பறக்கிறது.
- அநியாயம் விளைவித்த புண்ணுக்கு மருந்தளிக்கப் புறப்பட்டுப் போகின்றாள் தொழுகை எனும் பெண்ணாள்! தொல்தேவர் குடிப்பிறந்தாள்! ஆயினும் என்ன?
அ. க. 2—12