190
காரணம் என்ன தெரியுமா, தம்பி! ஆசாமி ஒருவருக்கும் ஒருவிதமான உதவியும் செய்யாதவன் என்ற போதிலும், ஒருநாள் உச்சிப்போதில், கடுமையான பசியுடன் வந்த ஒருவன், இவனிடம் எந்த உதவியும் பெற முடியாமற்போகவே, இங்கே தர்மசத்திரம் எங்கே இருக்கிறது? அதையாவது காட்டுமே ஐயா! என்று கேட்டிட ஆள்காட்டிவிரலை நீட்டி, சத்திரம் இருக்கும் பக்கத்தைக் காட்டினானாம். அந்தப் புண்ணிய காரியத்துக்காக, அவனுடைய ஆள்காட்டி விரலுக்கு அத்தனை மரியாதை!!
இவ்விதமான கதைகளைக் கூறியாகிலும் மற்றவர்களுக்கு உதவி செய்திடவேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டவேண்டும் என்று பலர் வெகுபாடுபட்டிருக்கிறார்கள்.
- ஆனால், அத்தகைய உதவிகள், தான தருமங்கள். பாலைவனத்திலே தெளித்த பன்னீர்த் துளிகளாகிப் போயினவேயன்றி, பாலைவனத்து வெப்பத்தைப் போக்கிடவில்லை!
இதனைக் கண்ட பிறகுதான் பேரறிவாளர்,
- மனிதன் வாழப் பிறந்தவன்,
- எல்லாம், எல்லோருக்கும் என்றே உளது.
என்ற அடிப்படையை எடுத்துக் காட்டி சோஷியலிசத்தை உருவாக்கினர்.
சோஷியலிசமே போதுமான பலனைத்தரவில்லை, தத்தித் தத்தி நடக்கிறது, தடுமாறிக் கீழே விழுகிறது என்று கூறி, அடித்து நொறுக்கிப் பிறகு புது வார்ப்படம் காண்பதுபோல, புரட்சி நடாத்திப் புதுமுறை காணவேண்டும் என்று கூறுகின்றனர் பொது உடைமைவாதிகள். ஆனால், இன்றைய காங்கிரசோ, ஏழைக்கு ஏதேனும் உதவி செய்திடுக! என்ற பழைய பேச்சைப் புது முறுக்குடன் மேடைகளிலே பேசுகின்றனர்; அதனைச் சோஷியலிசத் திட்டம் என்று வேறு நம்பச் சொல்கின்றனர்.
வேலிகள் ஆயிரம் பட்டக்காரருக்கு, வாண்டையாருக்கு, மூப்பனாருக்கு, இராமநாதபுரத்தாருக்கு, நெடும்பலத்தாருக்கு, அவர் போன்றாருக்கு; அவர்களெல்லாம்