193
இல்லை. நாலு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கின்படி இந்தத்தொகை 1900 கோடி ரூபாயாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
இதுபோல, முதலாளிகளின் முகாம்களை வளர வைத்துக்கொண்டே, சோஷியலிசமும் பேச முடிகிறது காங்கிரஸ் கட்சியினால்! அந்த அளவுக்கு மக்களின் மதி மங்கிக்கிடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
வெள்ளையராட்சியின் போது கிடைத்ததை விட அதிக வருவாய் இப்போது முதலாளிகளுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை எந்தக் காங்கிரஸ் தலைவரும் மறுத்திட முடியாது.
நான் குறிப்பிட்டேனே நாலு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கு—அதன்படி, தொழில் அதிபர்களுக்கு மத்திய சர்க்கார் வழங்கியுள்ள மானியம், சலுகை, கடன் ஆகிய வகையில் 590 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது.
- சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, முதலாளிகளை ஊட்டி வளர்க்கிறது; கொழுக்க வைக்கிறது.
அதனாலே காங்கிரசுக் கட்சிக்கு என்ன இலாபம் என்று கேட்கமாட்டாய்—உனக்குத்தான் தெரியுமே தம்பி; போன பொதுத் தேர்தலின்போது முதலாளிமார்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்த நன்கொடை, 98 இலட்ச ரூபாய் என்பது!
முதலாளித்துவ முறையைக் கட்டிக் காத்துக் கொண்டும் கொழுக்க வைத்துக்கொண்டும் இருக்கும் காங்கிரஸ்கட்சி எப்படி சோஷியலிசத்தின் உண்மைக் கணக்குப்படி நடந்துகொள்ள முடியும்? முடியாது!
- காங்கிரசுக் கட்சியிலேயே சிலர் இப்போது, சோஷியலிசம் வளரத்தக்க விதத்தில் காங்கிரசாட்சி நடந்து கொள்ளவில்லை என்று பேசத் தலைப்பட்டுள்ளனர்.
அமைச்சராவதற்கு முன்புவரை இந்திராகாந்தி இந்தக் கருத்தை வலியுறுத்தி வந்தார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை.
அ. க. 2—13