இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
197
இவர்களின் மனக்குமுறலையுமா, காங்கிரசாட்சியினர் எதிர்கட்சியினரின் எரிச்சலூட்டும் பேச்சு என்று அலட்சியப்படுத்திவிடப் போகிறார்கள்!!
- சென்ற கிழமை கல்கத்தாவில் பேசிய மாளவியா எனும் காங்கிரஸ் தலைவர், நேரு மறைந்ததற்குப் பிறகு, காங்கிரசின் சோஷியலிசப் பணி பின்னுக்குச் சென்றுவிட்டது என்று நிருபர்களிடம் கூறியிருக்கிறார்.
சோஷியலிசப் பாதையில் வேகமாக நடைபோடுவதாக இங்கு காமராஜர் முழக்கமெழுப்புகிறார். சோஷியலிசத்தில் இதுவரை இருந்து வந்த ஆர்வமும் மங்கிவிட்டிருப்பதாக மாளவியா கூறுகிறார். அவரும் காங்கிரஸ்காரரே! அவரைக் கண்டிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம், காமராஜரை!! செய்யமாட்டார்!!
சோஷியலிசம் பற்றி இங்கு காமராஜர்கள் பேசும் போது, மக்கள்,
- தனி முதலாளிகளின் கொட்டம் அடக்கப்படும், வருவாய்தரத்தக்க பெரிய தொழில்கள் பொதுத் துறைக்கு ஒதுக்கப்படும்,
- பொருளாதார பேதம் ஒழிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்,
- தொழில்கள் வெறும் இலாபவேட்டைக் கூடங்களாக இனி இராமல், மக்களுக்கு வசதி தேடித்தரும் அமைப்புகளாகிவிடும்,
- ஓடப்பர் உயரப்பராகி எல்லோரும் ஒப்பப்பராகிவிடுவார்!
என்றெல்லாம் எண்ணிக் கொள்கிறார்கள், பாவம் அவர்கள் அறியார்கள், காங்கிரசின் சோஷியலிசம் அது அல்ல என்பதனை.
சோஷியலிசம் பேசுகிறார்களே இவர்கள் ஆட்சி செய்யும் நாட்டிலே நாம் எப்படி நம்பி, பெருந்தொகைகளை முதல் போட்டுத் தொழில் நடத்துவது என்று ஐயப்பட்ட அமெரிக்க முதலாளிகள் இங்கு உலா வந்த-