198
னர், உரையாடினர், உசாவிப் பார்த்தனர். உண்மையை உணர்ந்துகொண்டனர், உவகையுடன் ஊர் திரும்பி மற்ற முதலாளிகளைக் கூட்டிவைத்து, அஞ்சற்க! அங்கு பேசப்பட்டு வரும் சோஷியலிசம் நம்மை ஒன்றும் செய்யாது. அது குறித்து நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தியாவிலுள்ள முதலாளிகளே அதுபற்றிக் கவலைப்படவில்லை; காங்கிரஸ் பேசும் சோஷியலிசம், ஏழையின் செவிக்கு இனிப்பளிக்கத்தான், வேறு எதற்கும் அல்ல; நாம் ‘நமது’ முதல் போட்டுத் தொழில் நடத்த ஆரோக்கியமான சூழ்நிலை இந்தியாவிலே அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளனர்.
போன வாரத்திலே, ஜி. எல். மேத்தா, இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார், வாஷிங்டன் நகரில்.
இந்திய முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து தொழில் நடத்தும் அமெரிக்க முதலாளிகளுக்கு மேத்தா அன்புரையும் நன்றியுரையும் வழங்கினார். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் 67 முதலாளிகளாம்.
முதலாளிகளுக்காக இல்லை காங்கிரசாட்சி, ஏழைக்காகவே இருக்கிறது; பணக்காரரின் கொட்டம் அடக்கப்படும், பாட்டாளியின் வாழ்வு உயர்த்தப்படும் என்றெல்லாம் இங்கே காமராஜர் சோஷியலிசம் பேசுகிறார். அங்கே ஜி. எல். மேத்தா அமெரிக்க முதலாளிகளைக் கூட்டி வைத்து,
- காங்கிரஸ் அரசுமீது சந்தேகம் கொள்ளாதீர்கள்.
- தனிப்பட்ட முதலாளிகளின் தொழில் அமைப்புகளுக்குக் காங்கிரஸ் அரசு விரோதம் காட்டவில்லை.
- காங்கிரசாட்சியில், 17 ஆண்டுகளில் தனியார் துறை விரிவடைந்திருக்கிறது. வளம் அடைந்திருக்கிறது. தனியார் துறைக்குக் காங்கிரஸ் அரசு உதவி அளித்து வருகிறது.
என்று எடுத்துக்கூறி, அமெரிக்க முதலாளிகளுக்கு அன்பழைப்பு விடுத்திருக்கிறார்.