200
- 3,00,000 டன் உற்பத்தி செய்யக்கூடிய தேன் இரும்புத் தொழிற்சாலையை 1967ல் துவக்கப்போவதாக! அமெரிக்க முதலாளியின் கூட்டுறவுடன்!!
- அலுமினியத் தொழிற்சாலையை விரிவு படுத்தப் போவதாக! அமெரிக்கக் கூட்டுறவுடன்.
- உர உற்பத்தித் தொழிற்சாலை விரிவான முறையில்! அமெரிக்கக் கூட்டுறவுடன்!!
அதேபோது, இந்தியப் பேரரசின் தொழில் அமைச்சர் சஞ்சீவய்யர்,
- தொழிலாளர்களுக்குப் போதுமான வசதிகளைத் தொழில் அமைப்புகள் செய்துதரவில்லை
என்று தெரிவிக்கிறார்.
பிர்லா புதுத்தொழில் அமைக்கிறார்; தொழிலாளி பழைய வேதனையைத் தொடர்ந்து அனுபவித்துவருகிறான்; காமராஜர் சோஷியலிசம் பேசுகிறார்; நாடு கேட்டுக்கொள்ளவேண்டி இருக்கிறது.
நாடு நம்புகிறதா என்று கேட்கிறாயா, தம்பி! நான் என்னத்தைச் சொல்ல! எதை எதையோ நம்பிக்கிடக்கும் மக்கள் இன்னமும் ஏராளமாக இருக்கிறார்களே!
அனுப்பிய மணியார்டர் வந்து சேர்ந்ததாகக் கடிதம் வருவதற்குள் துடிதுடிக்கும் அதே மக்கள், மேலுலகு சென்றுவிட்ட பெரியவர்களுக்கு, ‘திவசம்’ செய்வதன் மூலம், பண்டம் அனுப்பிவைப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்களே! எனவேதான் தம்பி! காங்கிரஸ் பேசும் சோஷியலிசம் பதர், நெல் அல்ல என்பதையும், காட்டும் கனிவு வெறும் கபடம் என்பதையும், அமைத்துள்ள முறை முதலாளியைக் கொழுக்கவைப்பது என்பதையும் விளக்கிக் காட்டவேண்டியிருக்கிறது. தெளிவு தேவைப்படும் அளவு இருந்தால், இன்றைய காங்கிரசில் நடுநாயகர்களாகக் கொலுவிருப்பவர்கள் யாரார் என்பதைப் பார்த்தாலே போதும் இந்தக் காங்கிரசினால் சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்பதைப் புரிந்து