இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
203
பேரூர் சமைத்தவர்க்கேன்
பிச்சைதானும்
என்றுதான் புரியுமோ
உமக்கிப் பேருண்மை.
குலப்பெருமை குடிப்பெருமை
விட்டொழிப்பீர்
வார்ப்படப் பொற்கடவுள்
வாணிபமும் விடுவீர்!
அவரவர் பெறும் தகுதி
ஆக்குந்திறன் வழியதாகும்.
உழைப்போர் நாங்கள்
உற்பத்தியாளர்
ஊமைகளாயிரோம்
இனியுந்தானே!
சுரண்டிடுவோரே!
சோம்பிக் கிடந்திடுவோரே;
பரவிப் பாய்ந்து வந்துளோம்
பாரினில்
பொழுது புலர்ந்தது
புவியெங்குமே, காண்!
இருளும் ஒழிந்தது
வாள் வெளிவந்தது.
உறையையும் வீசி
எறிந்தோம் கீழே!
தம்பி! கவிதையிலே குலுங்கிடும் எழுச்சியைக் கண்டனையா ! இவ்விதமான எழுச்சி முரசு கேட்டு உலாவந்து வெற்றிகண்ட முறை சோஷியலிசம்.